Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இலங்கைக்கு பராக் ஒபாமா வருகை தந்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-01-04
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா இலங்கைக்கு வந்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது எ

    INTRO :
    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா இலங்கைக்கு வந்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” சமீபத்தில் இலங்கைக்கு தனிப்பட்ட ரீதியில் பயணத்தினை மேற்கொண்டிருந்த பராக் ஒபாமா, காலி மாத்தறை பழைய வீதியில் இளநீர் கடையில் இளநீர் பருகும் காட்சி “ என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (30.12.2023) சிங்கள மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த புகைப்படத்தை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இந்தோனேசிய புகைப்படக் கலைஞரான Agan Harahap அவரின் உத்தியோகப்பூர்வ Instagram சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவின் அடிப்படையில், இந்தோனேசியாவில் உள்ள Minggiran மற்றும் Ndalem Beteng பிரதேசங்களில் வீதியோரத்தில் உள்ள கடைகளில் உணவு மற்றும் பானங்களை வாங்கியதாகும் அதற்கு செலுத்த வேண்டிய தொகையிற்கு பணத்தினை மாற்றிக்கொள்ள இயலாமையினால் அதனை பிறகு வந்து செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    சில தினங்களுக்கு பின்னரே குறித்த கடைக்கு தாம் செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த மறந்ததை உணர்ந்த Agan Harahap அதை திருப்பி செலுத்தி விட்டு அந்த கடையின் உரிமையாளருக்கு நினைவு பரிசுகளையும் வழங்கிட திட்டமிட்டுள்ளார்.

    அதற்கமைய உலக பிரசித்தி பெற்றவர்களான பராக் ஒபாமா, விளாதிமிர் பூட்டின் மற்றும் பில்லி எலிஷ் போன்றவர்கள் குறித்த கடைக்கு சென்று புகைப்படத்தினை எடுத்து கொண்டது போன்று வடிவமைத்து குறித்த வணிக இடத்தினை அலங்கரிக்கும் விதமாக குறித்த நினைவு பொருட்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

    brilio.net | Archived Link

    மேலும் குறித்த புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் படம் 2016 ஆம் ஆண்டு Laos பயணம் மேற்கொண்டிருந்த போது Mekong River அருகில் இளநீர் பருகிய போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

    Getty Images

    இது தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்தி 

    Link 1 | Link 2

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கைக்கு பராக் ஒபாமா வருகை தந்தார் என பகிரப்படும் புகைப்படம் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இலங்கைக்கு பராக் ஒபாமா வருகை தந்தாரா?

    Written By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-01-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.