Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மெலினா வாக்களிப்பதை எட்டிப்பார்த்தாரா டிரம்ப்?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-11-13
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவியான மெலினா டிரம்ப் வாக்கு பதிவிடுவதை பார்

    INTRO :
    அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

    இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவியான மெலினா டிரம்ப் வாக்கு பதிவிடுவதை பார்க்கும் ஓர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Siva Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் ” வாக்கு எண்ணுவதில் மட்டுமல்ல வாக்களிப்பில் கூட எப்போதும் ட்ரம்புக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சுப்பா…”  என இம் மாதம் 05 ஆம் திகதி  (05.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    அத்தேடலின் போது, குறித்த புகைப்படமானது 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    மேலும் independent இணையத்தளத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    Independent | Archived Link

    இது தொடர்பாக மேலும் மேற்கொண்ட சோதனையின் போது, டொனால்ட் டிரம்பின் மனைவி மெலினா இம்முறை தனியாக தான் வாக்களிக்க சென்றுள்ளார். அத்துடன் டொனால் டிரம்ப் அதற்கு முந்தைய தினம் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

    Nytimes | Archived Link

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு மெலினா வாக்களிப்பதை எட்டிப்பார்த்த டிரம்ப் என பகிரப்படும் புகைப்படம் 2016 ஆம் எடுக்கப்பட்டதாகும்.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:மெலினா வாக்களிப்பதை எட்டிப்பார்த்தாரா டிரம்ப்?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-11-13

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.