Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    உண்மையான கடல் கன்னி இலங்கை கடல் கரையோரம் ஒதுங்கியதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-06-08
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கை கடல் கரையோரம் உண்மையான கடல் கன்னி கரை ஒதுங்கியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல

    INTRO :
    இலங்கை கடல் கரையோரம் உண்மையான கடல் கன்னி கரை ஒதுங்கியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Faiz Amjath Rifky என்ற பேஸ்புக் கணக்கில் “ உண்மையான கடல் கன்னி இலங்கை கடல் கரையோரம் ஒதுங்கி உள்ளதுஎன இம் மாதம் 07 ஆம் திகதி  (07.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த வீடியோவினை நாம் இறுதி வரை பார்வையிட்டபோது, அது Trip Pisso என்ற யூடியுப் அலைவரிசையினை காட்டியது. நாம் குறித்த யூடியுப் சேனலினை ஆய்வு செய்த போது நேற்றைய தினம் குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அவ்வீடியோ பதிவில் உலகப் பெருங்கடல்கள் நாளாகிய இன்று கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் எண்ணத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.

    இதனை உண்மையான கடல் கன்னி என சில இணையத்தில் தவறான கருத்துடன் பகிரந்து வருகின்றனர். 

    மக்களை விழிப்புணர்வு படுத்தாமல், உண்மையான கடல் கன்னி இலங்கையில் பிடிப்பட்டது என இவ்வாறான தலைப்பிட்டு அவர்கள் பகிர்ந்துள்ளமை இங்கு பலர் தமது கருத்து பதிவிடலில் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    குறித்த காணொளி பதிவினை தெளிவளையில் உள்ள கடல்கரையில் வீடியோ எடுத்தாக குறித்த குழுவினை நாம் தொடர்புக்கொண்ட போது எமக்கு அறியக்கிடைத்தது.

    அதற்கமைய இது நீர்கொழும்பு கடற்கரை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சந்தைப்படுத்தலுக்காக அவர்கள் இட்ட தலைப்பின் உண்மைதன்மையினை அறியாது பலர் இதனை உண்மையான சம்பவம் என நினைத்து பகிர்ந்துள்ளமை எம்மால் காணக்கிடைத்து.

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய உண்மையான கடல் கன்னி இலங்கை கடல் கரையோரம் ஒதுங்கியது என பகிரப்படும் வீடியோ ஒரு விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உண்மையான கடல் கன்னி இலங்கை கடல் கரையோரம் ஒதுங்கியதா?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-06-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.