Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-06-01
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போல

    INTRO :
    வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு: வெளியான தகவல் “ என கடந்த மாதம் 18 ஆம் திகதி (18.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு என பரவுகின்ற செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    தற்போது உள்ள வளப்பற்றாக்குறையின் அடிப்படையில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல் தொடர்பாக கடந்த மாதம் 23 ஆம் திகதி (23.05.2022) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஆராயப்பட்டதுடன் அது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்நிலையில் அவ்வாறு வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தகவல் இணையத்தில் வைரலாகியது.

    வீட்டில் இருந்து கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள குறைப்பு இடம்பெறாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன, கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.05.2022) அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.

    news.lk | Archived

    thinakaran.lk I Archived 

    மேலும் அரச ஊழியர்களின் சம்பளத்தினை உயர்த்தும் முடிவினை பிரதமர் எடுத்ததாக பரவுகின்ற செய்தியினை பிரதமர் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

    வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைப்பு என பகிரப்படும் செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-06-01

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.