
INTRO :
புனித மக்காவில் பனிப்பொழிவு என ஒரு வீடியோ மற்றும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” பனிப்பொழிவு காணும் தூய மக்கா “ என இம் மாதம் 02 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (02.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவை ஸ்கிரின்ஷாட் எடுத்து அந்த புகைப்படத்தை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, Saudi Gazette டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி 1 ஆம் திகதி குறித்த வீடியோ பதிவானது போலியானது என பகிரப்பட்டிருந்த டுவிட் பதிவு எமக்கு கிடைக்கபெற்றது.
மேலும் சில இணையத்தள செய்தி குறித்த வீடியோ பதிவானது போலியானது என பதிவிட்டிருந்த செய்தி அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெற்றது. khaleejtimes.com| mashable.com
மேலும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் உத்தியோகப்பூர்வ ஊடக தொடர்பாளர் அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது போலியான வீடியோ என பதிவிட்டு இருந்த டுவிட் பதிவும் எமக்கு காணக்கிடைத்தது.
மேலும் மக்காவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கமும் குறித்த வீடியோ போலியானது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து பதிவிட்டிருந்த டுவிட்டர் பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், புனித மக்காவில் பனிப்பொழிவு என பகிரப்படும் வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:புனித மக்காவில் பனிப்பொழிவு என பகிரப்படும் வீடியோ உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: False


