INTRO :
ஆசிரியர் தின விழாக்களில் உணவு, பரிசுகள் வழங்க தடை என கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு விடுத்ததாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகளில் உணவுகளையோ அல்லது பரிசுப் பொருட்களையோ கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்று கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் தேவையில்லாத பணச் செலவுகளையும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாவதையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தை எளிமையான முறையில் மட்டுமே நிகழ்த்த வேண்டும்.” என இம் மாதம் 05 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (05.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமீபத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளில் உணவுகளையோ அல்லது பரிசுப் பொருட்களையோ கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்று கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தால் அது தொடர்பாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும், ஆகவே நாம் மேற்கொண்ட ஆய்வின் போது அவ்வாறான உத்தரவு பிறப்பித்திருந்தமை தொடர்பாக செய்திகள் எமக்கு கிடைக்கவில்லை.
ஆகவே நாம் இது தொடர்பா கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த சுற்றறிக்கை தான் இன்னும் அமுலில் உள்ளதாகவும் புதிதாக அவ்விதமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடவில்லை என தெரிவித்தார்.
நாம் மேலதிக உறுதிப்படுத்தலுக்காக பிரதமரும் கல்வி அமைச்சருமா ஹரினி அமரசூரியவின் ஊடக செயலாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இல்லை என்றும், 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த சுற்றறிக்கை எனவும் இது தற்போது கடினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் பல்வேறு பட்ட நிகழ்வுகளுக்காக வெவ்வேறு காலக்கட்டத்தில் பணம் சேகரிக்கப்பட்டால் அது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைப்பின் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி (15.03.2026) புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாடிய பிரதமர் பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். PM Office
மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து ஆசிரியர்களுக்கு வெகுமதி வழங்கள் தொடர்பான – சுற்றறிக்கை இல 33/2016
வருட இறுதி மற்றும் ஆசிரியர் தினம் போன்றவற்றின் போது வகுப்பாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு வெகுமதிகள் வழங்கவென வகுப்பு ரீதியாக பணம் சேகரிக்கப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறியப்படுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாக இதற்கு முன்னால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும் கூட சில குழுக்களால் பெற்றோரிடம் இருந்து பணம் அறவிடப்பட்டு வெகுமதிகள் வழங்கப்படுவதும், ஆசிரியர்கள் அவ்வெகுமதிகள் மற்றும் பரிசுப்பொருட்களை பெற்றுக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது பொருளாதார ரீதியில் பின் தங்கிய பெற்றோர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதுடன், அவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலையினுள் மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன், இது சுதந்திர கல்வி உரிமையில் ஏற்படும் தாக்கத்தையும் கருத்திற் கொண்டு அதிபர், ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வெகுமதிகள் வழங்கல், பணம் சேகரித்தல் மற்றும் பணம் தொடர்பாக எவருக்கும் பெற்றுக்கொள்ளல் அனுமதி வழங்காதிருப்பதுடன், மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் ஆசிரியருக்கோ, பாடசாலை ஊழியர்களுக்கோ தாம் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தவறு ஆகும்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்காக பணம் மற்றும் பரிசுப் பொருள்களை சேகரிப்பது, வழங்குவது. பெற்றுக் கொள்வது தொடர்பில் எந்த்த் தரப்பினரும் செயற்படாமல் இருப்பது அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
நேரடியாக அல்லது மறைமுகமாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வது தாபன விதிகோவை மற்றும் இலஞ்ச மோசடி சட்டத்தின் கீழ் தண்டனை பெறக் கூடிய குற்றமாகும். இதனைக் கருத்தில் கொண்டு செயற்படவும். Link
இது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அக்காலக்கட்டத்தின் கல்வி அமைச்சராக இருந்த அகில விராஜ் காரியவசம் தெரிவித்த கருந்தும் எமது ஆய்வின் மூலம் கண்டறிய கிடைத்தது.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சரான வைத்தியர் சுசில் பிரேமஜயந்த ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்குவதற்காகப் பணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .Hiru News
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்,ஆசிரியர் தின விழாக்களில் உணவு, பரிசுகள் வழங்க தடை என கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு என பகிரப்படுகின்ற செய்தி தவறாக வழிநடத்தக் கூடியவகையில் பகிரப்படுகின்ற ஒன்று என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



