Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என பரவும் வீடியோ பிண்ணனி தெரியுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-03-25
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம்


    INTRO :

    நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “முட்டை தொழிற்சாலை

    அவதானம் நம் நாட்டிலும் இருக்கலாம்

    Egg factory “ என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (27.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2017 ஆம் ஆண்டு sohu என்ற இணையத்தளத்தில் சீன மொழியில் வெளியாகிருந்த ஒரு கட்டுரை எமக்கு கிடைக்கப்பெற்றது.

    அதில் இருந்த வீடியோவும் தற்போது இணையத்தில் பரவி வருகின்ற வீடியோவும் ஒன்றாக இருந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய குறித்த கட்டுரையினை மொழியாக்கம் செய்து பார்க்கையில் 

    Facts | “Fake eggs” are rumors! Everything you need to know about eggs என்ற தலைப்பில் குறித்த ஆய்வறிக்கையினை பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.

    அதில் குறித்த முட்டைகள் விளையாட்டு முட்டைகள் என Nanjing Public Security Bureau தெரிவித்திருந்தாக குறித்த கட்டுரையில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    இணையத்தில் வைரலாகும் வீடியோவில் உள்ள ஸ்டிக்கர்களும், இணையத்தில் விற்பனைக்கு உள்ள விளையாட்டு முட்டைகளில் உள்ள ஸ்டிக்கர்களும் ஒத்தவையாக காணப்பட்டது.

    நாம் மேலும் இது குறித்து தேடிய போது, யூடியுப் தளத்தில் சிறு குழந்தை குறித்த விளையாட்டு முட்டையுடன் விளையாடும் காட்சி எமக்கு காணக்கிடைத்தது.

    மேலும் இது விற்பனைக்குள்ள சில இணையத்தளங்களும் எமக்கு காணக்கிடைத்தது.

    Link 

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் செயற்கை முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என பரவும் வீடியோவில் இருப்பது விளையாட்டு முட்டை தயாரிக்கும் வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என பரவும் வீடியோ பிண்ணனி தெரியுமா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-03-25

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.