INTRO :
மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பதவியை இராஜினாமா செய்தார் என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப்
ஆளுனர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். “என இம் மாதம் 24 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (24.08.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்கு மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது பதவியை இராஜினாமா செய்ததாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியாகி உள்ளதா என்பதை நாங்கள் ஆய்வு செய்தபோது, அவர் இராஜினாமா செய்ததாகவோ அல்லது ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவோ எந்தவொரு செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
ஆகவே நாம் மேற்கு மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பின் ஊடகப் பிரிவை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, இது தவறான தகவல் என்றும், அவர் இன்னும் மேல் மாகாண ஆளுநர் பதவியை வகிக்கிறார் என்றும், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் அவர் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மேற்கு மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஜனாதிபதி அனுரகுமாரவிடம் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
இது குறித்த மேற்கு மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பின் அதிகாரப்பூர்வ X கணக்கில் மூன்று மொழிகளில் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்து.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
மேற்கு மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமாரவிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும், குறித்த செய்தி தவறானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு எமக்கு உறுதி செய்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பதவியை இராஜினாமா செய்தார் என பரவும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பதவியை இராஜினாமாசெய்தாரா…?
Fact Check By: S.G.PrabuResult: False



