Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சீனாவில் புழு மழை என பரவும் வீடியோ; உண்மை தெரியுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-03-25
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : சீனாவில் புழு மழை என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவ


    INTRO :

    சீனாவில் புழு மழை என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “சீனாவில் பெய்த `புழு மழை’… வைரல் வீடியோ உண்மையா?

    ஆலங்கட்டி மழை சில நேரங்களில் வருவதுண்டு. இன்னும் சொல்லப்போனால், மீன் மழையைக் குறித்துக் கூட கேள்விப் பட்டிருப்போம். ஆனால் சீனாவில் `புழு மழை’ பெய்ததாக வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    சீனாவின் லியோனிங் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில் வரிசையாக உள்ள காரின் மேற்புறத்திலும், தெருக்களிலும் புழுக்கள் கொட்டிக் கிடக்கின்றன. விழும் புழுக்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் குடை பிடித்து பொது மக்கள் செல்கின்றனர்.

    இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் நிலையில், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. “ என இம் மாதம் 13 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (13.03.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த சம்பவம் தொடர்பாக டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்திருந்த சீன பிரஜையொருவர், இது போலியான தகவல் என்றும் இது poplar என்ற மரத்தின் ஆண் பூங்கொத்துகள் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Archived Link

    இது தொடர்பாக நாம் மேலும் தேடிய போது, poplar பூக்கள் உதிர்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தவறான கருத்தினை கொண்டு இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளதாக baidu.com இணையத்தில் வெளியாகிருந்த பதிவு எமக்கு கிடைத்தது.

    Link | Archived link

    சீனாவில் இது போன்ற சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளதா என்று தேடிய போது, alamy.com இணையத்தளத்தில் பீஜிங் நகரில் இது போன்று 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூக்கள் உதிர்வு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எமக்கு கிடைக்கபெற்றது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சீனாவில் புழு மழை என பரவும் வீடியோ சீனாவில் காணப்படும் poplar மரத்தின் மகரந்தங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட விரிவான ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சீனாவில் புழு மழை என பரவும் வீடியோ; உண்மை தெரியுமா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-03-25

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.