
INTRO :
ஜெர்சி தைக்க வழியில்லை என LPL போட்டி தொடரின் வீரர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ ஒரு Jersey அடிக்க வழி இல்ல, வாய் மட்டும் அப்பப்பா ” என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (19.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையின் மிகப்பெரிய லீக் கிரிக்கெட் போட்டித் தொடரான ஆறாவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (17.07.2026) அன்று ஆரம்பமாகியது.
கிரிக்கெட் லீக்கின் முதல் போட்டியாக நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கேலன்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியின் போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் தலைவரான மெஹிதி ஹசன் மிராஸ் கோல் கேலன்ஸ் அணியின் வீரராக களமிறங்கும் போது ஜெர்சியின் மீதுள்ள இலட்சினையினை மறைத்து களமிறங்கியமை காணக்கிடைத்தது.

குறித்த போட்டியில் பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த இடது கை மித-வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவித் கூட ஒரு குறிப்பிட்ட இலட்சினையினை மறைத்து விளையாடியமை காணக்கிடைத்தது.

ஆயினும் அதன் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) நடந்த போட்டியில் குறித்த மறைத்த இலட்சினையினை தெரியும் படி அவர் விளையாடியிருந்தமை காணக்கிடைத்தது.

இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினை நாம் நன்கு அவதானித்தபோது, அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இணையத்தில் வைரலாகின்ற புகைப்படத்தினையும், குறித்த போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜெர்சியின் புகைப்படத்தினையும் நாம் ஒப்பிட்டு பார்த்த போது, இணையத்தில் பகிரப்படுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

ஐசிசியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இன்றி மற்றைய போட்டிகளின் போதும் இதற்கு முன்னர் பல வீரர்கள் தமது ஜெர்சியில் சில இலட்சினைகளை மறைத்து அல்லது அந்த ஜெர்சியில் குறித்த இலட்சினையினை அகற்றி போட்டிகளில் விளையாடியுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
IPL | Moeen Ali
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜெர்சி தைக்க வழியில்லை என LPL போட்டி தொடரின் வீரர் ஒருவரின் பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



