Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    மியன்மார் ஜனாதிபதி என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-07-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :மியன்மார் ஜனாதிபதிக்கு இறைவன் வழங்கிய நீதி என புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என

    INTRO :
    மியன்மார் ஜனாதிபதிக்கு இறைவன் வழங்கிய நீதி என புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Abdul Samat Abdul Samat என்ற பேஸ்புக் கணக்கில் மக்களை தூண்டி இரானுவத்தின் ஆயுத பலத்துடன் ஒரு இனத்தையே சித்திரவதை செய்து இன்பம் கண்ட மியன்மார் ஜனாதிபதிக்கு இறைவன் வழங்கிய நீதி இது முடிவல்ல இன்னும் நிறையவே அவர் அனுபவிப்பார்,

    இதேபோன்ற நிலை நம் நாட்டு தலைவர்களுக்கும் வருவதற்கு காலம் தூரத்தில் இல்லை, “ என இம் மாதம் 24 ஆம் திகதி (24.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பகிரப்பட்டுள்ள குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, அது மியன்மார்களின் ஜனாதிபதி அல்ல என்று கண்டறியப்பட்டது.

    குறித்த புகைப்படமானது, 2013 ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு குறுகிய சிறையில் இருக்கும் பெண் என்ற தலைப்பில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    இதனை Officer Bimblebury என்ற நபர் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    wikimedia.org | Archived Link  


    மியன்மார்களின் ஜனாதிபதியின் அமைய புகைப்படம் தொடர்பில் நாம் தேடுதல் மேற்கொண்ட போது, மியன்மார்களின் இராணுவ ஆட்சி கைப்பற்றியதன் பின்னர் மியன்மார்களின் ஜனாதிபதி நீதிமன்றத்தில் முதல் முறையாக வந்த போது எடுக்கப்பட்ட எமக்கு கிடைக்கப்பெற்றது.

    apnews.com | Archived Link  

    மேலும் மியன்மார்களின் ஜனாதிபதி கடந்த பெப்ரவரி மாதம் முதல் வீட்டுக் காவலிலே மியன்மார்களின் இராணுவத்தினால் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    aljazeera.com | Archived Link  


    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், மியன்மார் ஜனாதிபதி என பகிரப்படும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது என உறுதியாகியுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:மியன்மார் ஜனாதிபதி என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-07-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.