INTRO :
இந்தியாவை தாக்கிய “அர்னாப்” சூறாவளி என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ இந்தியாவை தாக்கிய “அர்னாப்” சூறாவளி” என இம் மாதம் 28 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (28.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:
குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று, இந்தியாவை தாக்கிய “அர்னாப்” சூறாவளி போது எடுக்கப்பட்ட காணொளி உண்மையா என்பதனையே ஃபேக்ட் கிரஸண்டோ இங்கு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
அர்னாப் புயல் தொடர்பாக பகிரப்படும் குறித்த காணொளியினை இதற்கு முன்னர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தமை கண்டிருந்தமையினால், குறித்த காணொளி தொடர்பாக சந்தேகம் எழுந்தது.
ஆகவே காணொளி சில காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது.
அந்த பதிவில், “ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா அருகே உள்ள கிராம பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியது. இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததமை காணக்கிடைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
முன்னணி ஊடகங்களின் சமூக ஊடக பக்கங்களிலும் கூட இந்த வீடியோ 2026 மார்ச் மாதம் வெளியாகி இருந்தது. அனைத்திலும் இந்த சூறாவளி ஒடிசா மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
அர்னாப் புயல் 2026 அக்டோபரில் ஏற்பட்டது. அக்டோபர் 28 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது. ஆனால், அர்னாப் புயல் பாதிப்பு என்று வெளியாகி உள்ள காணொளி 2026 மார்ச் மாதம் ஒடிசாவில் பதிவாகி உள்ளது.
இதன் மூலம் ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல் என்று பரவும் காணொளி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி இந்தியாவை தாக்கிய “அர்னாப்” சூறாவளி என பகிரப்படும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.




