Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சவுதி தம்மாமில் நிலநடுக்க வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-10-28
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சவுதி அரேபியாவில் நிலநடுக்கும் தம்மாம் அருகே ராக்கா என்ற இடத்தில் நடந்திருக்கின்றது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தக

    INTRO :
    சவுதி அரேபியாவில் நிலநடுக்கும் தம்மாம் அருகே ராக்கா என்ற இடத்தில் நடந்திருக்கின்றது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Askar Samad என்ற பேஸ்புக் கணக்கில் ” சவுதி அரேபியாவில் சற்று முன் நிலநடுக்கம் தம்மாம் அருகே ராக்கா என்கிற இடத்தில் நடந்திருக்கிறது சேத விபரங்கள் தெரியவில்லை.”  என  இம் மாதம் 20 ஆம் திகதி  (20.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த வீடியோவிற்கு ஒத்த சில Keywords இணை பயன்படுத்தி கூகுளில் தேடுதலில் தேடியபோது, எமக்கு சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன. 

    அதில், Gulf Daily News Online என்ற செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் சவுதி அரேபியாவில் வாகன தரிப்பிடத்தில்  இடம்பெற்ற இடிபாடுகளில் உயிர் தப்பிய நபர் என ஒரு வீடியோ பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Facebook link | Archived Link

    இது குறித்து நாம் மேலும் தேடிய போது, இம்மாதம் 18 ஆம் திகதி (18.10.2020) Ksa News & Culture என்ற பேஸ்புக் பக்கத்தில் சவுதி அரேபியாவில் உள்ள வாகன தரிப்பிடம் இடிந்து விழுந்துள்ளதாக பதிவிட்டு குறித்த வீடியோவினை ஒத்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Facebook link | Archived Link

    மேலும் இது குறித்து நாம் தேடியபோது, albayan.ae என்ற செய்தி இணையதளத்தில் சவூதி அரேபியாவில் ஒரு குடியிருப்பு கோபுரத்தின் வாகன தரிப்பிடம் இடிந்து விழுந்துள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளது.

    Albayan link | Archived Link

    மேலும் நிலநடுக்கம் தொடர்பாக அறிக்கைகள் வெளியிடும் earth quake track என்ற நிலையத்தளத்தில் நாம் ஆய்வுசெய்த போது, கடந்த ஒரு மாதத்திற்கு எவ்விதமான நிலநடுக்கமும் சவுதி அரேபியாவில் பதியப்பட்டவில்லை என கண்டறியப்பட்டது.

    Earthquaketrack link | Archived Link

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய சவுதி அரேபியாவில் கார் தரிப்பிடத்தில் ஏற்பட்ட இடிபாடு பற்றிய காட்சியை எடுத்து, நிலநடுக்கம் என போலியான தகவலினை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றமை கண்டறியப்பட்டது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சவுதி தம்மாமில் நிலநடுக்க வீடியோவா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-10-28

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.