Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இவர் இலங்கை நாட்டு இராணுவ வீரரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-08-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கை நாட்டு இராணுவ வீரரின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என

    INTRO :
    இலங்கை நாட்டு இராணுவ வீரரின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Super Deal  என்ற பேஸ்புக் கணக்கில் “ வேறு நாடு ஒன்றும் இல்லை 

    எமது நாட்டு Army தான் 🇱🇰🇱🇰🇱🇰

    Super Deal🛑💚🚫

    பிடித்து இருந்தால் 

    follow மற்றும் Like, share  செய்து கொள்ளுங்கள். “ என இம் மாதம் 01 ஆம் திகதி (28.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது Kwaku Raymond என்ற கானா நாட்டை சேர்ந்த இராணுவ வீரர் என்று தெரியவந்தது.

    மேலும், இதனை உறுதி செய்துக்கொள்ள நாம் கூகுளில் அவரின் பெயரினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, அவரின் புகைப்படங்கள் பல எமக்கு கிடைக்கப்பெற்றன.

    இவர் தொடர்பாக வெளியான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன. 

    pulse.com.gh | briefly.co.za

    இலங்கை இராணுவத்தினரின் உடைகள் தொடர்பாக ஆய்வு செய்தோம். இதன் போது இலங்கை இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் அவர்களின் உடைகள் தொடர்பாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆவணம் எமக்கு கிடைக்கப்பெற்றது. அதனை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில் இலங்கை நாட்டு இராணுவ வீரர் என பகிரப்படும் புகைப்படம் கானா நாட்டு இராணுவ வீரரின் புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இவர் இலங்கை நாட்டு இராணுவ வீரரா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-08-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.