Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    கிண்ணியா படகு விபத்தில் சிறுவனை காப்பாற்றும் வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-11-23
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இன்று (23.11.2021) கிண்ணியாவில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்றும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கி

    INTRO :
    இன்று (23.11.2021) கிண்ணியாவில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்றும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ”  கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் 

    இன்றைய அசம்பாவித்த்தில் பாதிக்கப்பட்ட சிருவனை மீட்கும் காணொளி .. “ என இம் மாதம் 23 ஆம் திகதி (23.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் 23.11.2021 காலை இழுவை படகு கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

    கிண்ணியா நகர சபை பிரதேச சபையையும் இணைக்கும் குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.


    பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது. இந்த சம்பவத்துடன் குறித்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

    நாம் குறித்த வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இது பங்களாதேஷில் சந்த்பூர் நடைபெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது.

    இணையத்தில் கிண்ணியா படகு விபத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு பகிரப்படும் வீடியோ Extreme Launch Lover என்ற யூடியுப் தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எம்மால் கண்டறியப்பட்டது.

    இதனை எமது பங்களாதேஷ் பிரிவினர் உறுதி செய்தனர்.

    மேலும் இது குறித்து வெளியான செய்தி அறிக்கைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

    psdbanglatv Link I naturenewz.com link 

    நாம் மேலும் மேற்கொண்ட தேடலின் போது கிண்ணியா விபத்து மீட்பு நடவடிக்கை தொடர்பான வீடியோக்களும் எமக்கு கிடைக்கப்பெற்றன.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கிண்ணியா படகு விபத்துடன் தொடர்புடைய வீடியோ என பகிரப்படும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.


    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கிண்ணியா படகு விபத்தில் சிறுவனை காப்பாற்றும் வீடியோவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-11-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.