Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    பாம்பை விட அதிக விஷமுள்ள புழுவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-09-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பாம்பை விட அதிக விசமுள்ள புழு என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண

    INTRO :
    பாம்பை விட அதிக விசமுள்ள புழு என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் ” பாம்பைவிட அதிக விசமுள்ள இந்த புழுவிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

    இது கடித்து 5நிமிடங்களில் பலர் இந்தியாவில் மரணித்துள்ளார்கள்.

    வயல் மற்றும் தோட்டங்களில் மிகவும் அரிதாகக் காணப்பட்டாலும் எச்சரிக்கையாக இருங்கள். “ என இம் மாதம் 21 ஆம் திகதி (21.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த புகைப்படத்தில் உள்ள புழுவின் படத்துடன் இந்தியாவில் குறித்த புழுவினால் மரணமடைந்தவர்கள் என்ற பதிவும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, குறித்த இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டது. அது தொடர்பாக வெளியான செய்திகள்,

    maharashtratimes.com | Archived link

    நாம் குறித்த புழுவின் புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கம்பளிப்பூச்சி வகையான Slug Moth Caterpillar / Slug Caterpillar Moths புழுவாகும். Archived Link

    இந்த கம்பளிப்பூச்சி கொடிய பாம்பை விட அதிக விஷமுள்ள புழுவாக அடையாளம் காணப்பட்டதற்கான எந்த பதிவையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக, ஸ்லக் கம்பளிப்பூச்சி அந்துப்பூச்சிகள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த, இலங்கை பட்டாம்பூச்சி பாதுகாப்பு சங்கத்திடம் (BCSSL) விசாரணை செய்தோம்.

    அவர்கள் இது கம்பளிப்பூச்சியை சேர்ந்த Limacodidae குடும்பத்தினை சேர்ந்த அந்துப்பூச்சியான Nettle Slug caterpillar ஆகும்.

    கம்பளிப்பூச்சிகளின் தலைமுடியில் உள்ள விஷம் கொட்டுவதால் கடுமையான அரிப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவதாகவும், ஆனால் மேற்கூறிய குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, விஷம் ஆபத்தானதல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

    இது போன்ற விஷம் கொண்ட கம்பளிப்பூச்சிகள் அரிதாகவே காணப்படுவதாகவும், அவை உயிரிழக்கும் அளவுக்கு விஷம் கொண்டதாக எந்த செய்தியும் இல்லை என தெரிவித்தார்.

    எமது தமிழ் பிரிவினர் இது தொடர்பாக தமிழ்நாட்டின் முன்னணி பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்டு வினவிய போது, இது குறித்த பதிவில் குறிப்பிட்டதை போன்று உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு கொடீய விஷயமுள்ள புழு அல்ல என தெரிவித்துள்ளனர்.

    இதற்கமைய பாம்பை விட அதிக விசமுள்ள புழு என பகிரப்பட்ட புகைப்படத்தில் உள்ளது கம்பளிப்பூச்சி வகையினை சார்ந்த பூச்சி வகையாகும் என்பதோடு இது மனித உயிரை பறிக்கும் அளவிற்கு கொடீய விஷயமுள்ள பூச்சியல்ல என கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பாம்பை விட அதிக விஷமுள்ள புழுவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-09-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.