Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-12-09
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சி என வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியான

    INTRO :

    முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சி என வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Faiz UL B. Mohideen என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு நண்பர் அனுப்பிய காட்சி.#புரேவி புயல்”  என இம்மாதம் 02 ஆம் திகதி  (02.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படங்களை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது இப்புகைப்படம் 2005 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    Alamy | Archived Link

    2005 ஆம் ஆண்டு ஜுலை மாத்தில் டெனிஸ் என்ற சூறாவளி ஐக்கிய அமெரிக்காவை தாக்கியதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என Alamy என்ற புகைப்படங்கள் விற்பனை செய்யும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    மேலும் குறித்த புகைப்படமானது வெவ்வேறு சம்பவங்களுக்கு பகிரப்பட்டு வந்துள்ளமையும் எமக்கு காணக்கிடைத்தது.

    Popularmechanics | Archived Link

    2019 ஆம் ஆண்டு குறித்த புகைப்படத்தினையே ரஷ்ய நாட்டின் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தமை காணகிடைத்தது.

    Archived Link

    நாம் மேற்கொண்ட தேடலில் பழைய புகைப்படத்தினை எடுத்து புதியது போன்று தற்போது புரேவி சூறாவளியுடன் தொடர்புபடுத்தி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சியா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-12-09

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.