Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    குக் வித் கோமாளி நடுவர் chef தாமுவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-05-10
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :குக் வித் கோமாளி நடுவரான chef தாமு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண

    INTRO :
    குக் வித் கோமாளி நடுவரான chef தாமு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” chef தாமுவா இது. “ என இம் மாதம் 09 ஆம் திகதி (09.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    chef தாமு என பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    இலங்கையில் நேற்று (09.05.2022) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டாம் என்று அவரின் ஆதரவாளர்கள் கொழும்பில் அமைந்து பிரதமரின் அலரி மாளிகையினை நோக்கி வந்திருந்த நிலையில், அங்கிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களையும், கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் தாக்க ஆரம்பித்தனர்.

    இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் இந்தியாவில் பிரபல chef தாமு என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது.

    இது குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த நபர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக நேற்று காலை கொழும்பிற்கு வந்த நபர் என்றும் அதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் அமைதியான போராட்டத்தினை மேற்கொண்ட நபர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னர், ஏற்பட்ட அமைதியின்மையின் போது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

    குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட மஹிந்த கஹந்தகம என்றும், அவரின் மகள் அவரின் தந்தை வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு விரைவில் சுகமடையுமாறு பதிவிட்டுள்ள புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    facebook.com I Archived Link

    மஹிந்த கஹந்தகம மற்றும் Chef தாமு இருவருடைய புகைப்படங்களை நாம் ஒப்பிட்டு பார்த்த போது, மஹிந்த கஹந்தகம அவர்கள் Chef தாமு போன்ற உருவமைப்புடன் இருப்பதால் மக்கள் இதனை தவறாக பகிர்ந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டது.

    இதன் அடிப்படையில், குக் வித் கோமாளி நடுவரான chef தாமு என பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:குக் வித் கோமாளி நடுவர் chef தாமுவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: Satire

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-05-10

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.