Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-05-18
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போல

    INTRO :
    ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

     Moganeswaran Chettiar  என்ற பேஸ்புக் கணக்கில் ” வைத்தியசாலைகளில் COVID நோயாளிகளுக்கு இடம் இல்லை.

    கவனமாக வீட்டிலேயே இருங்கள்

    👇

    இது இலங்கை ராகம வைத்தியசாலை.”  என இம் மாதம் 13 ஆம் திகதி  (13.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இது தொடர்பாக நாம் ராமக போதனா வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியான வைத்தியர் ரணவீராவிடம் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு விசாரித்தோம்.

    அதன் போது, குறித்த வீடியோவில் உள்ளவர்கள் கொரோனா நோயாளிகள் இல்லை என்றும் அவர்கள் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவசர வார்டில் உள்ள நோயாளிகள் என தெரிவித்ததார்.

    சாதாரண சூழ்நிலைகளிலும், அவசர விபத்து வார்டில் ஒரு நாளைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அந்த வார்டுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என அவர் எமக்கு தெரிவித்தார்.

    ராகம வைத்தியசாலையில் அவரச விபத்து வார்டில் படுக்கைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மற்ற பிரிவுகளில் போதுமான படுக்கைகள் உள்ளன என்று தெரிவித்தார்.

    ராகமா வைத்தியசாலையில் 4 கொரோனா வார்டுகள் உள்ளன என்றும், தற்போது சுமார் 30 கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்றும் தெரிவித்த அவர், ராகமா வைத்தியசாலையுடன் இணைந்த கந்தனா வைத்தியசாலையில் 2 வார்டுகளில் கொரோனா தொற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட சுமார் 80 நோயாளிகள் உள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

    எவ்வாறாயினும், ராகமா வைத்தியசாலையின் கொரோனா வார்டில் கொரோனா நோயாளிகள் மட்டுமே உள்ளனர் என்றும், அந்த கொரோனா வார்டின் தற்போதைய நிலையைக் காட்டும் சில புகைப்படங்களையும் எமக்கு அனுப்பி வைத்தார்.


    நாம் இதுகுறித்த தேடுதலின் போது, 2019 ஆம் ஆண்டு ராகம வைத்தியசாலையில் அவரச விபத்து வார்டின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Facebook | Archived

    குறித்த புகைப்படங்கள் இன்று ராகம வைத்தியசாலையில் நிலைமை என்று அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    Facebook | Archived

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை என பகிரப்பட்ட வீடியோவானது தவறானது என்று கண்டறியப்பட்டது.

    இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: Partly False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-05-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.