Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பெப்ரவரி மாதம் ; உண்மை தெரியுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-01-15
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற பெப்ரவரி மாதமே 2022 இல் வரவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்

    INTRO :
    823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற பெப்ரவரி மாதமே 2022 இல் வரவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” அதிசய மாதம். வரும் பிப்ரவரி உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் வராது. ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஞாயிறுகள், 4 திங்கள், 4 செவ்வாய், 4 புதன், 4 வியாழன், 4 வெள்ளி மற்றும் 4 சனிக்கிழமைகளைக் கொண்டுள்ளது. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. இது பணம் பைகள் என்று அழைக்கப்படுகிறது. எனவே, குறைந்தது 5 நபர்கள் அல்லது 5 குழுக்களுக்கு அனுப்புங்கள், பணம் 4 நாட்களில் வரும். சீன ஃபெங் சுய் அடிப்படையில். படித்த 11 நிமிடங்களுக்குள் அனுப்பவும் “ என இம்மாதம் 09 ஆம் திகதி (09.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நமது குழுவினர் இது போன்று ஏற்கனவே சில உண்மை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதே போன்று, இந்த தகவலும் உண்மையல்ல என்று பார்த்தவுடனே கண்டறிய முடிந்தது.

    லீப் வருடத்தினை தவிர ஏனைய வருடங்களில் பெப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே காணப்படும். லீப் வருடத்தில் மாத்திரம் 29 நாட்கள் காணப்படும்.

    நாம் கடந்த வருடம் (2021), நடப்பு வருடம் (2022) மற்றும் அடுத்த வருடம் (2023) ஆகிய வருடங்களில் முறையே பெப்ரவரி மாதத்தினை ஆய்வு செய்த போது, அனைத்து வருடங்களும் பெப்ரவரி மாதத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகள் நான்கு முறை வருகின்றமை காணக்கிடைத்தது.


    2021 I 2022 I 2023

    இது ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மாதங்களை கொண்டு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. அவ்வாறு பகிரப்பட்ட இரு வெவ்வேறு போலியான தகவல் குறித்து நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கைகள் கீழே காணப்படுகின்றது.

    823 வருடத்திற்கு ஒருமுறை வரும் டிசம்பர் மாதம் இது உண்மை என்ன?

    100 வருடத்திற்கு ஒரே திகதி ஒரே கிழமை; உண்மை என்ன?

    உண்மையற்ற தகவலினை யாரோ ஒருவர் உருவாக்கி பகிர அதனை சற்றும் சிந்திக்காமல் பலர் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.

    FACT CHECK: 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய பிப்ரவரி 2022 என்று பரவும் வதந்தி!

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பெப்ரவரி மாதம் என பகிரப்படும் தகவலில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பெப்ரவரி மாதம் ; உண்மை தெரியுமா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-01-15

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.