Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஆப்கானிஸ்தானில் கடத்தி சித்ரவதை செய்யப்பட்ட பெண் உரிமைப் போராளியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-02-22
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஆப்கானிஸ்தானில் கடத்தி சித்தரவதை செய்ய பட்ட பெண் உரிமைப் போராளி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறி

    INTRO :
    ஆப்கானிஸ்தானில் கடத்தி சித்தரவதை செய்ய பட்ட பெண் உரிமைப் போராளி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Twitter Link | Archived Link

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” ஹிஜாப் போராளிகள் கவனத்திற்கு

    #ஆப்கானிஸ்தானில் கடத்தி சித்தரவதை செய்ய பட்ட பெண்  உரிமை பெண் போராளி 👇👇👇 “ என இம் மாதம் 09 ஆம் திகதி (09.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் Yandex இயங்குதளத்தினை பயன்படுத்தி குறித்த புகைப்படத்தினை ரிவஸ் இமேஜினை உபயோகித்து ஆய்வு செய்த போது, இது கடந்த வருடம் பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவம் என சில டுவிட் பதிவுகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

    https://twitter.com/SHussainShokat/status/1368523802452312084
    https://twitter.com/Bharatojha03/status/1368575569286238209

    கடந்த வருடம் மார்ச் 7 ஆம் திகதி பதிவிட்டுள்ள குறித்த டுவிட் அடிப்படையில் பாகிஸ்தானில் திருநங்கை ஒருவரை மன்சூர் கான் என்ற நபர் தாக்கியுள்ளதாக பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    எமது ஆப்கானிஸ்தான் பிரிவினர் நடத்திய உண்மை கண்டறியும் தேடலில் இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெறவில்லை என கண்டறிந்து உறுதி செய்துள்ளது. மேலும் வாசிக்க

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஆப்கானிஸ்தானில் கடத்தி சித்ரவதை செய்யப்பட்ட பெண் உரிமைப் போராளி என பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஆப்கானிஸ்தானில் கடத்தி சித்ரவதை செய்யப்பட்ட பெண் உரிமைப் போராளியா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-02-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.