Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சவுதி அரேபிய பாலைநிலத்தில்  வெள்ளப்பெருக்கு என பரவும் வீடியோ; உண்மை தெரியுமா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-04-18
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சவுதி அரேபிய பாலைநிலத்தில் வெள்ளப்பெருக்கு என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவ

    INTRO :
    சவுதி அரேபிய பாலைநிலத்தில் வெள்ளப்பெருக்கு என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ பாலைவனசோலை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாலைவன வெள்ளம் இப்போதுதான் பார்க்கிறோம் 

    இது சவுதி அரேபியாவில் “ என இம் மாதம் 18 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (18.04.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த தேடலின் போது, கடந்த வருடம் குறித்த காணொளி டிக்டொக் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய இது சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வு அல்ல என உறுதி செய்யமுடிந்தது.

    குறித்த டிக்டொக் காணொளியின் அடிப்படையில் நாம் சவுதி அரேபியாவில் Tabuk பகுதியில் வெள்ளப்பெருக்கு என கூகுளில் ஆய்வு செய்தபோது, கடந்த 2018 ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் பாரிய வெள்ளப்பெருக்கினை குறித்த பகுதி சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.

    Website Link

    மேலும் எக்ஸ் தளத்தில் வைரலாகும் குறித்த வீடியோ 2018 ஆம் வருடம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சவுதி அரேபிய பாலைநிலத்தில் வெள்ளப்பெருக்கு என பரவும் வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சவுதி அரேபிய பாலைநிலத்தில்  வெள்ளப்பெருக்கு என பரவும் வீடியோ; உண்மை தெரியுமா ?

    Written By: Fact Crescendo Team 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-04-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.