Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை விமான படை செய்த சாகசமா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-03-17
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கை விமானப்படையில் 70 ஆவது நிறைவையொட்டி இலங்கை விமான படையினர் மேற்கொண்ட விமான சாகச வீடியோ என்று ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் க

    INTRO :
    இலங்கை விமானப்படையில் 70 ஆவது நிறைவையொட்டி இலங்கை விமான படையினர் மேற்கொண்ட விமான சாகச வீடியோ என்று ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

     East1st  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் விமான சாகசக் காட்சிகள்

    விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் விமான சாகசக் காட்சிகள்

    இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படுகின்ற விமான சாகசக் காட்சிகள் மற்றும் பலவிதமான விமானக் காட்சிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

    இந்நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளன.

    இதற்காக இலங்கை விமானப்படையின் 24 விமானங்களும், இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் 23 விமானங்களும் கலந்து கொள்ளவுள்ளதாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குரூப் கப்பித்தான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்”  என இம் மாதம் 03 ஆம் திகதி  (03.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் வைலாக பரவி வருகின்ற வீடியோவை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது,2020 ஆம் வருடம் சவுதி அரேபியாவில் இடம்பெற்ற விமான சாகச நிகழ்விற்கான ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.

    PetaPixel | Archived

    சவுதி அரேபியாவின் 90 ஆவது தேசிய தினத்தினை முன்னிட்டு விமானப்படையினர் மேற்கொண்ட ஒத்திகை நிகழ்வினை புகைப்படம் எடுக்கும் காட்சி என குறிப்பிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    இலங்கை விமான படையின் விமான சாகச வீடியோ என பகிரப்படும் வீடியோவும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட வீடியோவும் ஒரே வீடியோ பதிவாகவுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

    மேலும், அந்த வீடியோவில் காணப்படுகின்ற தரை தோற்றம் இலங்கையினை ஒத்ததாக இல்லாதிருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த தரைதோற்றமானது சவுதி அரேபியாவை ஒத்த தரை தோற்றம் ஆகும்.

    இலங்கை விமானப்படையின் விமான சாகச நிகழ்வுகளின் புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் மற்றும் யூடியுப் தளத்தில் எமக்கு கிடைக்கப்பெற்றன.

    அதில், காணப்பட்ட வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது.

    Sri Lanka Air Force

    எமது தேடலுக்கு அமைய, 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை விமான படை செய்த விமான சாகசம் என பகிரப்பட்ட வீடியோ போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை விமான படை செய்த சாகசமா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-03-17

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.