Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் உள்ள புகைப்படமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-07-21
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருக்கும் புகைப்படம் என சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது

    INTRO :
    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருக்கும் புகைப்படம் என சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” செழிப்பற்ற நிலையில் சிங்கப்பூரில்🤣 “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.07.2022)  பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் என பரவும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, முன்னாள் ஜனாதிபதி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    website Link | Archived Link

    நாம் சிங்கப்பூரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய என பரவும் புகைப்படத்தினையும் முன்னாள் ஜனாதிபதி 2020 இல் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையும் நாம் ஒப்பிட்டு பார்த்த போது இரண்டும் ஒரே புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் என பகிரப்படும் புகைப்படம் 2020 ஆம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்த போது எடுத்த புகைப்படம் என உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் உள்ள புகைப்படமா?

    Fact Check By: S G Prabu 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-07-21

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.