Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இலங்கையில் உள்ள அனுமான் பாதமா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-10-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : இலங்கையில் உள்ள அனுமான் பாதம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது

    INTRO :

    இலங்கையில் உள்ள அனுமான் பாதம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Vimal Nila என்ற பேஸ்புக் கணக்கில்  ” இலங்கையில் உள்ள அனுமான் பாதம் ஷேர் கண்ணுங்க நல்ல செய்தி வீடு தேடி”  என இம்மாதம் 12 ஆம் திகதி  (12.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool  பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    தேடலின் போது குறித்த கால் தடம் தாய்லாந்தில் உள்ள கால் தடம் என கண்டறியப்பட்டது. மேலும், இலங்கையில் உள்ள அனுமானின் கால் தடம் என தெரிவிக்கப்பட்ட இடத்தின் புகைப்படமும் குறித்த பதிவில் இருந்தமை காணக்கிடைத்தது.

    Zeenews India | Archived Link 

    இலங்கையில் நுவரெலியா அமைந்துள்ள சீதா அம்மன் கோவில் தான் அனுமானின் பாதம் அமையந்துள்ளது. நாம் அது குறித்து தேடியபோது கிடைக்கப்பெற்ற பாத அடியின் வடிவம் இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்துடன் தொடர்பில்லை என கண்டறியப்பட்டது.

    Trip advisor Link | Archived link 

    மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது tamilbrahmins என்ற இணையத்தளத்தில் வெளியாகியிருந்த அறிக்கையில் பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான கால் அடி சுவடுகளும் அனுமானின் பாத சுவடு என தெரிவிக்கப்படும் பாத அடிச் சுவடின் புகைப்படங்களும் காணக்கிடைத்துள்ளன.

    எமது மியன்மார் பிரிவினர் இது குறித்து மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Conclusion: முடிவு

    நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் இலங்கையில் உள்ள அனுமான் பாதம் என்று தாய்லாந்தில் உள்ள அனுமான் பாதத்தின் புகைப்படம் பகிரப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    Avatar

    Title:இலங்கையில் உள்ள அனுமான் பாதமா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-10-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.