Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த காட்சியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-08-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது

    INTRO :
    ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இது ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த புகைப்படம்…

    இந்த கருவி அந்த கழுகு 6 மாத குட்டியாய் இருக்கும் போது பொருத்தப்பட்டது… 20 வயதில் இருந்த பின்பு அந்த கருவியில் இருந்து அதன் வாழ்நாள் பயணத்தை கணித்த போது கிடைத்தது ..

    கீழ் இருக்கும் படத்தை பார்த்தால் தெரியும் அது பயணித்த பாதை…

    ஆச்சரியம் என்ன வென்றால், இது ஒரு முறை கூட கடலுக்கு மெல் பறக்கவே இல்லை…

    படித்தவுடன் பகிர்ந்துவிட்டேன் “ என செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி 2020 (29.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    ரஷ்யாவைச் சார்ந்த கழுகு ஒன்றின் மீது ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டதாகவும், 20 ஆண்டுகளாக கழுகு ஒன்று மேற்கொண்ட பயணத்தின் வரைபடம் என்று சிலர் பகிர்ந்துள்ளனர். 

    20 ஆண்டுகளுக்கு முன்பாக ஜிபிஎஸ் பயன்படுத்தியிருக்க முடியுமா என்ற சந்தேகம் எமக்கு எழுந்தது.

    இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது போலியான செய்தி என்ற பேஸ்புக் பதிவு ஒன்று கிடைத்தது. 

    அதில், “சமூக ஊடகங்களில்  பலரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட கழுகு சவுதி அரேபியாவில் உயிரிழந்தது என்று கழுகு ஒன்றின் ஆச்சரியப்படத்தக்கக் கதை என்று ஒரு சில புகைப்படங்கள் மற்றும் தகவலை பரப்பி வருகின்றனர். 

    உண்மையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜிபிஎஸ், ஜிஎஸ்எம் போன்றவற்றை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும் இவ்வளவு சக்திமிக்க தொழில்நுட்பம் இல்லை. 

    அகுய்லா நிபலென்சிஸ் எனப்படும் புல்வெளிக் கழுகு பற்றி 2018ம் ஆண்டு மேற்கு கஜகஸ்தானில் Dr.Katzner and Dr. Bragin குழுவினரால் ஆய்வு நடத்தப்பட்டது. சௌதி அரேபியாவில் இறந்ததாக கூறப்படும் கழுகு உள்ளிட்ட அனைத்து படங்களும் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட கழுகுகள்தான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இதை Elena Schneider என்ற நபர் பேஸ்புக்கில் 2019 பெப்ரவரி 28 ஆம் திகதி வெளியிட்டிருந்தார். தன்னை அவர் சைபீரியச் சுற்றுச்சூழல் மையத்தின் பறவையியல் நிபுணர் என்று குறிப்பிட்டிருந்தார். 

    நம்முடைய தேடலின் போது ஏஎஃப்பி நிறுவனம் வெளியிட்டிருந்த உண்மை கண்டறியும் கட்டுரையும் கிடைத்தது. அதிலும், நமக்குக் கிடைத்த Elena Schneider பேஸ்புக் பதிவை ஆதாரமாக வைத்திருந்தனர். மேலும் Elena Schneider தன்னுடைய பதிவில் ஆய்வை நடத்தியவர் என்று குறிப்பிட்டிருந்த Katzner என்பவரை ஏஎஃப்பி நிறுவனம் தொடர்புகொண்டு பேசியதாக குறிப்பிட்டிருந்தனர். அப்போது அவர், “மத்திய ஆசியாவில் உள்ள இந்த கழுகுகளின் இடப்பெயர்வு வழிகள் தொடர்பாக தங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. கஜகஸ்தானிலிருந்து 20 புல்வெளி கழுகுகளுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு சுமார் 10 மாதம் அவற்றின் நடமாட்டத்தை ஆய்வு செய்தோம்.

    படத்தில் உள்ள ஒவ்வொரு ஊதா நிறக் கோடும் ஒரு கழுகின் எட்டு முதல் 10 மாத பயணத்தின் அசைவாகும். சில கழுகுகள் அரேபியாவில் உயிரிழந்தன. சில கழுகுகள் ஆப்ரிக்காவில் இறந்தன. சில கழுகுகள் மட்டுமே மத்திய ஆசியாவுக்குத் திரும்பி வந்தன. சவுதி அரேபியாவில் விழுந்த கழுகு ஒன்றை அந்நாட்டைச் சார்ந்த ஒருவர் கண்டறிந்தார். அது பற்றி அவர் அரபு மொழியில் பதிவிட்டிருந்தார். அவருக்கு கழுகுகளின் இடப் பெயர்வு படத்தை நான் அனுப்பியிருந்தேன். 20 கழுகுகளின் பயணம் என்று குறிப்பிட்டு அவருக்கு செய்தி அனுப்பியிருந்தேன். அது தவறாக மொழி பெயர்க்கப்பட்டு ஒரு கழுகின் 20 ஆண்டு பயணம் என்று தவறாக பகிரப்பட்டு வந்துள்ளது” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த ஆய்விற்கு அமைய 20 கழுகுகளின் பயணப்பாதை என்பதை 20 வருட கழுகின் பயணப்பாதை என தவறாக பதிவிட்ட பதிவினை உண்மையென நம்பி பலர் பகிர்ந்து வருகின்றமை உறுதிசெய்யப்ட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த காட்சியா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-08-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.