Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஃபோன் சார்ஜ் வெடிக்கும் வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-01-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :  இரவு கையடக்கத்தொலைபேசியை சார்ஜிங் போட்டு விட்டு உறங்கும் எல்லாருக்கும் இந்த வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிற

    INTRO : 

    இரவு கையடக்கத்தொலைபேசியை சார்ஜிங் போட்டு விட்டு உறங்கும் எல்லாருக்கும் இந்த வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    மலையோரம் செய்திகள் என்ற பேஸ்புக் கணக்கில் ” இரவு phone charge போட்டுவிட்டு உறங்கும் எல்லோருக்கும் இந்த வீடியோ .. share பண்ணவும்.”என இம் மாதம் 20 ஆம் திகதி  (20.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    குறித்த வீடியோ பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் நாம் குறித்த வீடியோவை பார்த்தபோது, அது சீன மொழியில் எழுதப்பட்டிருந்தமை அவதானிக்க கிடைத்தது. 


    ஆகவே நாம் Yandex Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, அது 2019 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் வீடியோ என கண்டறியப்பட்டது. 

    சீனாவில் ஷாங்காய் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இடம்பெற்ற மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்தபோது பதிவான சிசிடிவி வீடியோ என்பது கண்டறியப்பட்டது.

    live leak| Archived link

    இது குறித்து பல இணையதளங்களில் வெளியான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    uk.news.yahoo | Archived link 

    newsflare| Archived link 

    நாம் மேற்கொண்ட தேடலின் போது, இது சார்ஜ் போட்ட கையடக்கத்தொலைபேசி வெடித்த வீடியோ அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஃபோன் சார்ஜ் வெடிக்கும் வீடியோவா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-01-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.