Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இது திருகோணமலை மத்திய வீதியா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-05-12
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ஊரடங்கிற்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎எழில் கொஞ்சும் த

    ஊரடங்கிற்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது. 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

    தகவலின் விவரம்:

    Facebook Link | Archived Link 

    ‎எழில் கொஞ்சும் திருகோணமலை என்ற பேஸ்புக் கணக்கில் ” இது வெளிநாடு அல்ல…ஊரடங்குக்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி🙄🙏😎” என்று இம் மாதம் 4 ஆம் திகதி (04.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 


    இதுதொடர்பாக, நாம் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம். 

    குறித்த தேடுதலில் போது,இது இலங்கையின் திருகோணமலையில் உள்ள மத்திய வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பது கண்டறியப்பட்டது.

    Google Search 

    குறித்த புகைப்படம் அவுஸ்ரேலியாவில் உள்ள கங்காரு தீவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    நாம் கூகுளில் road in kangaroo island Australia என்று தேடிய போது குறித்த புகைப்படத்தினை ஒத்த பல புகைப்படங்கள் எமக்கு காணக்கிடைத்தன.

    இதுகுறித்து நாம் மேலும் மேற்கொண்ட சோதனையின் போது, திருகோணமலையில் உள்ள மத்திய வீதியினை நாம் கூகுள் வரைப்படத்தில் தேடிய போது, அதில் இரு ஓரங்களிலும் கடைகளே காணப்பட்டது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடுதலில் ஊடரங்கிற்கு பிறகு திருகோணமலை என்று இணையத்தில் பரவும் புகைப்படம் அவுஸ்ரேலியாவில் உள்ள கங்காரு தீவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Conclusion: முடிவு

    மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தேடுதலில் ஊடரங்குக்கு பிறகு திருகோணமலை என்று இணையத்தில் பரவும் புகைப்படம் அவுஸ்ரேலியாவில் கங்காரு தீவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது. 

    Avatar

    Title:இது திருகோணமலை மத்திய வீதியா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-05-12

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.