Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    உண்மையில் புகைப்படத்தில் உள்ள நபர் ரவூம் ஹக்கீமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-04-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ரவூப் ஹக்கீமின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்

    INTRO :
    ரவூப் ஹக்கீமின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Saju Khaan என்ற பேஸ்புக் கணக்கில் ” தன்கையாலே தண்ணீர் போத்தல் தூக்குமளவிற்கு எளிமையானவர் ரவூப் ஹக்கீம் ”  என பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி  (18.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பதியப்பட்டிருந்த குறித்த புகைப்படத்தை நாம் கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, maalaimalar இணையத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.

    குறித்த செய்தி பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வெளியாகியிருந்தது, அதில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வருகை தந்த நடிகர் அஜித் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    maalaimalar.com | Archived Link

    மேலும், அதில் பதிவிட்டு இருந்த ஒரு வீடியோ பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது. அதை நாம் கவனித்த போது, இணையத்தில் ரவூம் ஹக்கீம் என தற்போது பகிரும் புகைப்படம் இரண்டும் ஒன்று என்பது உறுதியானது.

    மற்றும் மேலும் சில ஊடகங்களில் அஜித் குறித்து வெளியான வீடியோவும் எமக்கு கிடைத்தன.

    எமது குழுவினர் ரவூம் ஹக்கீம் மற்றும் நடிகர் அஜித் இருவரின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்த போது அதில் பல வித்தியாசங்கள் காணப்பட்டது.

    எமது தேடலுக்கு அமைய, ரவூம் ஹக்கீம் என பகிரப்பட்ட புகைப்படம் நடிகர் அஜித்தின் புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது. நகைச்சுவைக்காக பகிரப்பட்ட இந்த தகவல், படிப்படியாக உண்மை போன்று மற்றவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. இது, சமூக வலைதள பயனாளர்களை குழப்பும் வகையில் உள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உண்மையில் புகைப்படத்தில் உள்ள நபர் ரவூம் ஹக்கீமா?

    Fact Check By: Nelson Mani 

    Result: Satire

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-04-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.