Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    திருத்தந்தை பிரான்சிஸின் அறை என பரவும் புகைப்படம் உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-05-01
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : திருத்தந்தை பிரான்சிஸின் அறை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டற

    INTRO :

    திருத்தந்தை பிரான்சிஸின் அறை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “140 கோடி கத்தோலிக்கரை வழிநடத்தும் திருத்தந்தையின் அறை “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (22.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கத்தோலிக்கர்களை வழிநடத்தும் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் கருதப்படுபவர். அவர் திருந்தந்தையாக பொறுப்பேற்றதிலிருந்து எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மேலும் வத்திகானில் திருத்தந்தை தங்குவதற்காக உள்ள சொகுசு மாளிகையை தவிர்த்து விருந்தினர்கள் தங்குவதற்கான விடுதியில் இரண்டு அறைகளில் அவர் வசித்து வருவதாக அவர் நியமிக்கப்பட்ட காலத்தில் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் அவரது எளிமையான அறை என்பது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது வத்திகான் நகரில் உள்ள அவரது அறையின் புகைப்படமா என்று அறிய குறித்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

    அப்போது, இந்த புகைப்படம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதராகக் கருதப்படும் பியோ என்பவரின் வசிப்பிடத்துக்கு திருத்தந்தை வருகை தந்த போது எடுத்த புகைப்படம் என்று குறிப்பிட்டு இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருப்பது தெரிந்தது.

    aleteia.org I Archive

    கத்தோலிக்கர்கள் தொடர்பாக செய்திகளை மட்டும் வெளியிடும்  EWTN News Nightly என்ற ஊடகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் 2018 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி பதிவிடப்பட்டிருந்தது. அதில் பியோவின் படுக்கை அறையில் திருத்தந்தை பிரான்சிஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    Archive

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் திருத்தந்தை பிரான்சிஸின் அறை என பரவும்  புகைப்படமானது புனித பியோவின் அறைக்கு 2018 ஆம் ஆண்டு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:திருத்தந்தை பிரான்சிஸின் அறை என பரவும் புகைப்படம் உண்மையா ?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-05-01

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.