Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகமா இது; உண்மை என்ன?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-01-01
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :108 வயது நிரம்பிய பள்ளி தோழிகள் இருவரும் சந்தித்துக்கொண்ட தருணம் என்று ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த த

    INTRO :
    108 வயது நிரம்பிய பள்ளி தோழிகள் இருவரும் சந்தித்துக்கொண்ட தருணம் என்று ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Lucky Suresh என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்”  என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி  (16.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் நாம் குறித்த வீடியோவில் இருந்து எடுத்த ஸ்கிரின் ஷாட் புகைப்படத்தினை Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, Mojosemi Forest Park என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் குறித்த வீடியோ பதிவேற்றம் செய்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    குறித்த இன்ஸ்டெகிராம் வீடியோ பதிவில் இந்தோனேசிய மொழியில் இருந்ததை நாம் Google Translator உதவியுடன் மொழிபெயர்த்து பார்த்த போது, அது ”இறுதியாக மோஜோசெமி பூங்காவில் ஒரு புதிய செல்லப்பிராணி ” என்ற அர்த்தத்தை தந்தது.

    Instagram.com| Archived link 

    குறித்த இன்ஸ்டெகிராம் பக்கத்தினை நாம் ஆய்வு செய்த போது, அது ஒரு வன பூங்கா என்றும் அங்கு டைனோசர் வகை சேர்ந்த இயந்திர பொம்மைகள் நிறைய காணப்படுகின்றது.

    நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம் என்று பகிரப்பட்ட வீடியோவில் இருப்பது ஒரு பூங்காவிற்கா தயாரிக்கப்பட்ட இயந்திர பொம்மை, என கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகமா இது; உண்மை என்ன?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-01-01

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.