Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    கனடாவில் கணவரை நாய் போல கூட்டிச் சென்ற பெண் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-01-23
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :கனடாவில் ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண் என ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில்

    INTRO :
    கனடாவில் ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண் என ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Siva Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் ” கனடாவில் ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.”  என இம் மாதம் 13 ஆம் திகதி  (13.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    குறித்த புகைப்படம்  பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool  பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, அது 2014 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் புகைப்படம் என கண்டறியப்பட்டது. 

    itv.com | Archived link 

    மேலும் டுவிட்டர் தளத்திலும் குறித்த புகைப்படத்தினை சிலர் 2014 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தமையும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    மேலும் Dailymail இணையத்தில் வெளியாகிய வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    இது குறித்து பல இணையத்தளங்களில் வெளியான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    Daily mail | Archived link 

    mirror.co.uk | Archived link 

    தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற செய்தி தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது, அதற்கான புகைப்பட ஆதாரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கப்படவில்லை.

    நாம் மேற்கொண்ட தேடலின் போது, கனடாவில் கணவரை நாய் போல நடைபயிற்சி சென்ற பெண் செய்தி உண்மையாக இருந்தாலும் அதற்கு பயன்படுத்தப்பட்ட புகைப்படம் தவாறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    குறித்த புகைப்படம் 2014 ஆம் ஆண்டு லண்டனில் வைத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கனடாவில் கணவரை நாய் போல கூட்டிச் சென்ற பெண் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-01-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.