Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ராகம பகுதியில் இடம்பெற்ற சமையலறை சிசிடிவியில் பதிவான எரிவாயு வெடிப்பா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-12-04
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சமீபத்தில் ராகம பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவ சிசிடிவி வீடியோ என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ

    INTRO :
    சமீபத்தில் ராகம பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவ சிசிடிவி வீடியோ என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” ராகம பகுதியில்  இடம் பெற்ற  எரிவாயு குழாய் வெடிப்பு,   அதிஷ்டாவசமாக   சிலிண்டர்  வெடிக்கவில்லை.

    CCTV  பதிவு “ என இம் மாதம் 02 ஆம் திகதி (02.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் பகிரப்படும் வீடியோ தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் போது, இது 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது.

    இதனை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நபர், “இன்று எனது தாய் அதிஷ்டவசமாக எவ்விதமான காயங்களும் இன்றி உயிர் தப்பினார். இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள். “

    அவர் குறித்த பதிவினை பதிவிட்ட திகதியும், சிசிடிவியில் உள்ள திகதியும் ஒரே நாள் என்பதால் குறித்த சம்பவம் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்றது என கண்டறியப்பட்டது.

    Archived Link | Archived Link

    குறித்த வீடியோவை மீண்டும் பகிர்ந்த குறித்த நபர் முதலில் அந்த வீடியோவில் சம்பவம் தொடர்பில் விளக்கம் இல்லாது பகிரந்தமையால், அது சமீபத்தைய சம்பவம் என மக்கள் மத்தியில் பகிரப்பட்டிருந்தது.

    அதன் பின்னரே குறித்த பதிவானது மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    Facebook Link I Archived

    ராகம பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் எதும் பதிவாகியுள்ளதா என கண்டறிய எமது குழுவினர் ராகம பொலிஸ் நிலையத்தினை தொடர்புகொண்டு வினவிய போது, இவ்வாறான இரு சந்தர்ப்பங்கள் இதுவரை இடம்பெற்றுள்ளதாக எமக்கு தெரிவித்தனர். 

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், சமீபத்தில் ராகம பகுதியில் இடம்பெற்ற சமையலறை CCTV யில் பதிவான எரிவாயு வெடிப்பு என பகிரப்படும் வீடியோ 2018 ஆம் ஆண்டு பதிவாகிய சம்பவம் என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ராகம பகுதியில் இடம்பெற்ற சமையலறை சிசிடிவியில் பதிவான எரிவாயு வெடிப்பா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-12-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.