Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    <strong>பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அலுவலகத்தினுள் நுழையும் முன்  விளக்கேற்றினாரா ?</strong>

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-11-04
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பிரிட்டனின் பிரதமரான ரிஷி சுனக் அலுவகத்தினுள் நுழைய முன்னர் விளக்கேற்றினார் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போ

    INTRO :
    பிரிட்டனின் பிரதமரான ரிஷி சுனக் அலுவகத்தினுள் நுழைய முன்னர் விளக்கேற்றினார் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” பிரிட்டனின் புதிய பிரதமரான ரிஷி சுனக் தனது புதிய அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு தனது பாரம்பரிய சடங்குகளை செய்து விட்டு நுழையும் காட்சி….!!! 😀❤

    #TamilFMofficial | #UK | #RishiSunak “ என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (27.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் பிரிட்டனின் புதிய பிரதமராக பதியேற்ற ரிஷி சுனத் தனது கன்னி உரையின் பின்னர் அவரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தினுள் செல்லும் நிகழ்வு தொடர்பான செய்திகளை ஆய்வு செய்தோம்.

    அதற்கமைய அந்த நிகழ்வின் போது அவர் விளக்கேற்றி பாரம்பரிய சடங்குகள் செய்து நுழையும் சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்பது எம்மால் உறுதி செய்ய முடிந்ததது.

    குறித்த வீடியோவில் உள்ள நிகழ்வு எப்போது நடந்தது என கண்டறிய நாம் கூகுள் தேடு தளத்தில் Rishi Sunak Lights lamps என்று தேடிய போது கடந்த வருடம் தீபாவளி தினத்தினை அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் அவரின் உத்தியோக அலுவலகத்தின் முன்னர் கொண்டிய போது எடுக்கப்பட்டது என எமது ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டது.

    The Guardian | Archived link 

    இதற்கமைய பிரிட்டனின் பிரதமரான ரிஷி சுனக் அலுவலகத்தினுள் நுழையும் முன்  விளக்கேற்றியதாக பகிரப்படும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அலுவலகத்தினுள் நுழையும் முன் விளக்கேற்றினாரா ?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-11-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.