Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் பெண்ணா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-02-22
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :உலகின் முதல் பிளாஸ்டிக் பெண்ணை சீனா உருவாக்கியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியான

    INTRO :
    உலகின் முதல் பிளாஸ்டிக் பெண்ணை சீனா உருவாக்கியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” *HOT BREAKING NEWS TEAM               

     இது நிஜமான (மனிதப்) பெண் அல்ல!!  சீனா உருவாக்கிய முதல் பிளாஸ்டிக் பெண்.  அவ்வளவு iகேள்விகளுக்கும் தகுந்த பதில் கூறுவது*மகா ஆச்சரியம். மனிதன் என்னை உருவாக்கினான்*.  *அவனிடம் ஆத்மா உள்ளது. அதுமட்டும் என்னிடம் இல்லை* 

    *என்கிறது இப் பொம்மை*. “ என இம் மாதம் 20 ஆம் திகதி (20.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவினை கிரின்ஷாட் எடுத்து புகைப்படமாக்கி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டடோம். 

    குறித்த தேடலின் போது, இணையத்தில் பிளாஸ்டிக் பெண் என பகிரப்படுகின்ற வீடியோவானது, 2018 ஆம் வருடத்தில் பிளேஸ்டேஷன் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. “Detroit: Become Human” என்ற பிளேஸ்டேஷன் வீடியோ கேமில் உள்ள Chloe என்ற அனிமேஷன் பெண்ணின் பேட்டி என்று குறிப்பிட்டிருந்தனர்.

    playstation.com I Archive

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் பெண் என பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ்பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் பெண்ணா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-02-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.