Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு வந்த காட்சியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-08-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு வந்த காட்சியசமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கி

    INTRO :
    அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு வந்த காட்சியசமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” அமெரிக்க அதிகாரி நான்சி பெலோசியுடன் தைவானுக்கு அமெரிக்க விமானபடை ஒன்று வருகை.

    20 போர் விமானங்கள் நான்சி பெலோசியின் விமானத்தை அமெரிக்க போர் விமானங்கள் அழைத்துச் சென்றன. நான்சி பெலோசியை ஏற்றிச் செல்லும் விமானத்தில் சீனத் தலையீடு ஏதேனும் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த அமெரிக்க விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டது அமெரிக்காவுக்கு சொந்தமான விமானங்கள் தைவான் வான்வெளிக்குள் நுழைந்தால் விமானத்தை சுட்டு வீழ்த்துவோம் என்று சீனாவின் பகிரங்க அச்சுறுத்தலை மீறி அமெரிக்க விமானப்படை விமானத்தை தைவானில் தரையிறக்கியதன் மூலம் ஜி ஜின்பிங்கின் முகத்தில் அமெரிக்க இராணுவம் நேரடியாக “காறித் துப்பியது”. அதுமட்டுமின்றி சீனா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது…..

    அமெரிக்கனின் நம்பமுடியாத தைரியம்.

    டிராகன்கள் 🐉 கற்பனையானவை ஆனால் கழுகுகள் உண்மையானவை. “ என இம் மாதம் 03 ஆம் திகதி (03.08.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்த காட்சி என பரவுகின்ற வீடியோவிலிருந்து சில பகுதிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த ஆய்வின் போது, இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இணையத்தில் பகிரப்பட்டு வந்திருப்பது எம்மால் காண முடிந்தது.  

    ஆனால் நான்சி பெலோசி தைவானுக்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி (02.08.2022) தான் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

    நமது ஆய்வின் மூலம்  கண்டறியப்பட்ட குறித்த வீடியோவில், அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சுற்றி வருகின்றன எனவும் . மேலும், தெற்கு சீன கடலில் அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் போர்ப் பயிற்சி என்றும் சிலர் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர்.

    அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்த காட்சி என பரவும் வீடியோ 2021 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பரவி வருகின்றமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு வந்த காட்சியா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-08-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.