Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    Fact Check : கேரளாவை சேர்ந்தவர்கள் மரணமடைந்த சவுதி வாகன விபத்தின் வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-12-13
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :கேரளாவை சேர்ந்தவர்கள் மரணமடைந்த சவுதி வாகன விபத்தின் வீடியோ என சமூக வலைத்தளங்கள் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல

    INTRO :
    கேரளாவை சேர்ந்தவர்கள் மரணமடைந்த சவுதி வாகன விபத்தின் வீடியோ என சமூக வலைத்தளங்கள் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” சவுதியில் நடந்த சோகம்

    நேற்று #சவுதியில் நடந்த கோரமான 

    கார் விபத்தில் #கேரளாவைச் சேர்ந்த #தாய்.தந்தை மற்றும் மூன்று குழந்தைகள் உள்பட ஒரு குடும்பத்தின் மரணம் ஒரு தலைமுறையே பாக்கி வைக்கமால் ஒரு அழகான குடும்பம் கண் இமைக்கும் நேரத்தில் இவ்வுலகில் இருந்து மறைந்து இருக்கிறது 

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

    #இறைவன் அக்குடும்பத்தை 

    பொருந்திக் கொள்வாயாக! “ என இம் மாதம் 07 ஆம் திகதி (07.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த வீடியோவில் இருந்த ONSCENE.TV என்ற குறியீட்டு சொல்லினை கூகுளில் தேடிய போது, எமக்கு ஒரு யூடியுப் அலைவரிசை கிடைக்கப்பெற்றது.

    குறித்த யூடியுப் சேனலினை நாம் ஆய்வு செய்த போது, சவுதியில் நடந்த கார் விபத்து என பகிரப்பட்டிருந்த வீடியோ கடந்த மாதம் 30 ஆம் திகதி குறித்த யூடியுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் அதில், லாஸ் ஏஞ்சல்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    குறித்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த விபரத்தினை நாம் வாசித்தபோது, southbound I-110 என்ற இடத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.

    இது குறித்தான செய்திகளும் எமது ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றன.

    abc7.comI californianewstimes.com I ktla.com

    சவுதி அரேபியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலியான சம்பவம் கடந்த 3 ஆம் திகதி நள்ளிரவில் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகிருந்தன.

    saudigazette.com.sa I Archived I gulfnews.com I Archived

    அதற்கமைய குறித்த வீடியோ சவுதி அரேபியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் கேரளாவை ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்துடன் தொடர்பில்லை என்பது உறுதியாகின்றது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கேரளாவை சேர்ந்தவர்கள் மரணமடைந்த சவுதி வாகன விபத்தின் வீடியோ என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கேரளாவை சேர்ந்தவர்கள் மரணமடைந்த சவுதி வாகன விபத்தின் வீடியோவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-12-13

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.