Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஒலிம்பிக் போட்டிக்கான பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டதா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-08-21
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இந்த வருடம் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்தவருடம் பின்போடப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுக்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக ஒரு வீடியோ பதிவானது பேஸ்புக்கில் பகிரப்பட்டு வர


    இந்த வருடம் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்தவருடம் பின்போடப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுக்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக ஒரு வீடியோ பதிவானது பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

    தகவலின் விவரம்:

    Facebook Link | Archived Link

    K Chandrasekaran JP என்ற பேஸ்புக் கணக்கில்  ” #வர்ணஜாலமிடும்_வான_வேடிக்கைகள்..!

    இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்காக டோக்கியோ இந்த பட்டாசுகளை தயாரித்திருந்தது.

    கொரோனா தொற்றுநோய் உலகெங்கும் பரவி வியாபித்திருப்பதால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியாத நிலை. ஆனால், இந்த பட்டாசுகளை 2021 வரை சேமித்து வைத்திருக்க முடியாது, எனவே ஒலிம்பிக் பட்டாசுகள் இந்த நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. அழகான பியுஜி மலையின் அடிவாரத்தில் ஒலிம்பிக் போட்டிக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டன. அனுபவியுங்கள். ” என்று  நேற்று முன்தினம் (19.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக மேற்கொண்ட தேடுதலின் போது, இவ்வருடம் கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக ஐப்பான் நாடு வருகின்ற வருடம் (2021) ஜுலை வரை பின்போடப்பட்டுள்ளது.

    எனினும் நமது தேடுதலின் போது இவ்வருடம் ஜுலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி ஒரு வருட காலம் பின்போடப்பட்டிருந்தாலும், அதற்காக தயாரிக்கப்பட்டிருந்த கணினி மயமாக்கப்பட்ட வானவேடிக்கைகள் குறித்த தினத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

    குறித்த நிகழ்வு தொடர்பாக அந்நாட்டு செய்தி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    nippon.com | Archived Link 

    The Japan Times | Archived Link 

    நாம் பேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோவின் ஒரு screenshot புகைப்படத்தினை கொண்டு Google Reverse Image Tool பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதலின் போது, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி குறித்த வீடியோவானது hiramu55bocaboca என்ற யூடியுப் அலைவரிசையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

    குறித்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘FWsim’ என்றால் என்ன என்று கண்டறிவதற்காக நாம் மேற்கொண்ட தேடுதலின் போது firework simulator என்ற கணினி மயமாக்கப்பட்ட வானவேடிக்கை தயாரிக்கும் இணையத்தளமான fwsim.com கண்டறியப்பட்டது.

    இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வீடியோ தற்போது பகிரப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டிக்கான தயாரிக்கப்பட்ட வான வேடிக்கை நிகழ்வு கடந்த மாதம் 24 ஆம் திகதி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதற்கமைய ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக தெரிவித்து,  பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஒலிம்பிக் போட்டிக்கான பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டதா..?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-08-21

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.