Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என பகிரப்படும் காணொளி உண்மையானதா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-09-11
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்


    INTRO :

    சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link


    சமூகவலைத்தளங்களில் “ ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம்

    வாசிக்க – https://adaderanatamil.lk/news/cmf0hlt9a004uqplpjk2jjx8v

    WhatsApp இல் பின்தொடர :  https://rb.gy/g9g2b

    மேலதிக செய்திகளுக்கு – https://shorturl.at/ihekG “என இம் மாதம் 01 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (01.09.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    ஆப்கானிஸ்தானில் இம் மாதம் 01 ஆம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. virakesari.lk |bbc.com

    இணையத்தில் பகிரப்பட்டுள்ள குறித்த காணொளியினை புகைப்படங்களாக மாற்றி நாம் ஆய்வு செய்தபோது இது கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

    CGTN யூடியுப் அலைவரிசையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதில் கண்காணிப்பு கெமரா காணொளி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை காட்டுகின்றது என தலைப்பிட்டு பகிரப்பட்டிருந்தது.

    குறித்த வருடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் தொடர்பாக வெளியான செய்தி அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது. cgtn.com |cnn.com

    சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள காணொளியையும் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியையும் ஒப்பிட்டு பார்த்த போது இரு காட்சிகளும் ஒன்றாக இருந்ததோடு, அதில் உள்ள ஒலியும் ஒத்திருந்தமை எம்மால் கண்டறியப்பட்டது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கம் என பரவும் வீடியோ தவறானது என்பது கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என பகிரப்படும் காணொளி உண்மையானதா..?

    Fact Check By: S G Prabu  

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-09-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.