Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    துருக்கி நிலநடுக்கத்தின் போது கார் கேமராவில் பதிவான காட்சியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-02-13
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது காரில் உள்ள கேமராவில் பதிவாகிய காட்சி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது

    INTRO :
    சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது காரில் உள்ள கேமராவில் பதிவாகிய காட்சி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ #துருக்கி 🇹🇷 காரில் உள்ள கேமராவில் இருந்து பூகம்பத்தின் நேரடி பதிவு..!

    #நமது #ஆட்டங்கள் ஒரு போதும் நிலை பெறச்செய்யாது!! “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (08.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கடந்த திங்கள் கிழமை (06.05.2023) அதிகாலையில் துருக்கி, சிரியாவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் அறிய

    எமது குழு முதலில் குறித்த வீடியோவின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்த போது, இது 2011 ஆம் ஆண்டு ஐப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது பதிவாகிய காட்சி என கண்டறியப்பட்டது.

    உண்மைப் பதிவைக் காண: Youtube.com I Archive 

    அந்த வீடியோவில் 2011.03.11 அன்று குறித்த நிகழ்வு பதிவாகியுள்ளதாக காணப்பட்டது. அத்துடன் அதில் உள்ள நில அளவையின் குறியீடுகளை வைத்து நாம் இது எந்த இடம் என்று ஆராய்ந்தோம். அதன்படி இது ஐப்பான் நாட்டில் டோக்கியோவில் அமைந்துள்ள ஓர் இடம் என கண்டறியப்பட்டது.

    maplandia I Archive

    இதனை மேலும் உறுதி செய்ய நாம் 2011 japan earthquake Tokyo என்று தேடிய போது, 9 ரீக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி சுனாமியும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாக செய்திகள் 

    ncei.noaa.gov I unep.org I apnews.com

    இணையத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் என பகிரப்படுகின்ற வீடியோவையும் ஐப்பானில் நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் ஒப்பிட்டு பார்த்த போது, இரண்டும் ஒத்து போகின்றமை எம்மால் காணக்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துருக்கி நிலநடுக்கத்தின் போது கார் கேமராவில் பதிவாகிய காட்சி என பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:துருக்கி நிலநடுக்கத்தின் போது கார் கேமராவில் பதிவான காட்சியா இது?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-02-13

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.