Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    உக்ரைனில் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல் என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-08-07
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : உக்ரைன் ஒடெசா துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா என ஒரு வீடியோ  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வே

    INTRO :

    உக்ரைன் ஒடெசா துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா என ஒரு வீடியோ  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “உக்ரைனின் ஒடெசா துறைமுகம், தரைக்குக் கீழே இருந்த இரண்டு பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்களைத் தாக்கிய நான்கு ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டது, ஒரு பெரிய வெடிப்பைத் தூண்டியது.  உக்ரைனுக்கு உயர் வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லும் பிரித்தானியக் கப்பல்கள்! “ என இம் மாதம் 02 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (02.08.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2020 ஆம் ஆண்டு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.

    நாம் இணையத்தில் தற்போது பரவி வருகின்ற பிரிட்டிஷ் சரக்குக் கப்பல்களைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை என பகிரும் வீடியோவில் இருக்கும் காட்சிகளும், 2020 ஆம் ஆண்டு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்த காட்சிகளும் ஒன்றாக இருந்தமை காணக்கிடைத்தது.

    அதில் காணப்பட்ட Mavericks cafe bar என்ற உணவகத்தை நாம் கூகுளில் தேடிய போது, அது லெபனான் நாட்டில் அமைந்துள்ளமை காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, உக்ரைனில் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல் என பரவும் வீடியோ லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்து ஏற்பட்ட காட்சி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உக்ரைனில் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல் என பரவும் வீடியோ உண்மையா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-08-07

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.