Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    வருடத்தில் மாதமும், வெள்ளிக்கிழமையும் ஒரே மாதிரி அமைந்துள்ளாதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-01-29
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :2022 இல் வருகின்ற ஒவ்வொரு மாத்தின் முதல் வெள்ளிக்கிழமைகள் அந்த மாதமும் ஒன்றாக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்

    INTRO :
    2022 இல் வருகின்ற ஒவ்வொரு மாத்தின் முதல் வெள்ளிக்கிழமைகள் அந்த மாதமும் ஒன்றாக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் இந்த வருடம் சிறப்பைப்

    பாருங்கள் 2022

    01.01.2022 வெள்ளிக்கிழமை

    02.02.2022 வெள்ளிக்கிழமை

    03.03.2022 வெள்ளிக்கிழமை

    04.04.2022 வெள்ளிக்கிழமை

    05.05.2022 வெள்ளிக்கிழமை

    06.06.2022 வெள்ளிக்கிழமை

    07.07.2022 வெள்ளிக்கிழமை

    08.08.2022 வெள்ளிக்கிழமை

    09.09.2022 வெள்ளிக்கிழமை

    10.10.2022 வெள்ளிக்கிழமை

    11.11.2022 வெள்ளிக்கிழமை

    12.12.2022 வெள்ளிக்கிழமை

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 “ என இம்மாதம் 20 ஆம் திகதி (20.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நமது குழுவினர் இது போன்று ஏற்கனவே சில உண்மை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதே போன்று, இந்த தகவலும் உண்மையல்ல என்று பார்த்தவுடனே கண்டறிய முடிந்தது.

    நாம் 2022 ஆம் வருடத்தின் கலெண்டரை முதலில் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.


    2022 

    நமது தேடலின் போது, குறித்த பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்கள் மட்டுமே வெள்ளிக்கிழமைகள் வருகின்றன.

    மற்றைய பத்து மாதங்களிலும் குறித்த பதிவில் உள்ள திகதிகள் வேறு கிழமைகளாக வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

    உண்மையற்ற தகவலினை யாரோ ஒருவர் உருவாக்கி பகிர அதனை சற்றும் சிந்திக்காமல் பலர் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், வருடத்தில் மாதமும், வெள்ளிக்கிழமையும் ஒரே மாதிரி அமைந்துள்ளது என பகிரப்படும் தகவலில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    823 வருடத்திற்கு ஒருமுறை வரும் டிசம்பர் மாதம் இது உண்மை என்ன?

    100 வருடத்திற்கு ஒரே திகதி ஒரே கிழமை; உண்மை என்ன?

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:வருடத்தில் மாதமும், வெள்ளிக்கிழமையும் ஒரே மாதிரி அமைந்துள்ளாதா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-01-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.