Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிட வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-11-08
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிட வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவ

    INTRO :
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிட வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ”  புனித் ராஜ்குமார் அவர்களின் கடைசி நிமிடங்கள். இவ்வளவு தான் வாழ்க்கை. 46 வயசுல எல்லாம் முடிஞ்சு போச்சு. இதுல சில பேரு ஜாதி மதம்னு கிடந்து அடிச்சிக்கிறாங்க. “ என இம் மாதம் 2 ஆம் திகதி (02.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    கன்னட திரையுலக நடிகரான புனித் ராஜ்குமார் திடீர் இதயத்துடிப்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறுதி நிமிடங்கள் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    குறித்த வீடியோவில் இருந்து காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, 2021 செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி இந்த வீடியோவை சிலர் டுவிட்டரில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், பெங்களூருவில் 33 வயதான இளைஞர் ஜிம் பயிற்சி செய்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரது கடைசி நிமிடங்கள் சிசிடிவி-யில் பதிவானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

    Archive

    இதுதொடர்பாக மேலும் நாம் தேடிய போது யூடியூபில் வெளியான சில வீடியோக்களும் நமக்கு கிடைத்தன. அந்த வீடியோவில் இந்த வீடியோ 2021 ஆகஸ்ட் 25 ஆம் திகதி பதிவாகி இருப்பதை தெளிவாகக் காண முடிந்தது.

    Graphical user interface, application

Description automatically generated

    YouTube 1 I YouTube 2

    நடிகர் புனித் ராஜ்குமார் 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி மரணமடைந்தார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ அதற்கு சில மாதங்களுக்கு முன்பு இருந்தே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. 

    செப்டம்பர் 1 ஆம் திகதி டுவிட்டரில் வெளியான வீடியோவும் நமக்குக் கிடைத்துள்ளது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிட வீடியோ என பரவும் வீடியோ முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது இந்திய பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிட வீடியோவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-11-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.