Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    கொரோனாவில் மரணித்த நண்பன் தெரிவித்தமையால் பணத்தை வீதியில் வீசிய நபர்?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-04-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பணக்கார மனிதன் கொரோனாவினால் இறந்துள்ளதாகவும், அவர் இறப்பதற்கு முன் தான் சம்பாதித்த பணத்தினை நடு வீதியில் வீசுமாறும்  இதை பார்க்கும் மக்கள் இந்த உலகத்தில், பணம் செல்வம் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முன்பு எவ

    INTRO :
    அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பணக்கார மனிதன் கொரோனாவினால் இறந்துள்ளதாகவும், அவர் இறப்பதற்கு முன் தான் சம்பாதித்த பணத்தினை நடு வீதியில் வீசுமாறும்  இதை பார்க்கும் மக்கள் இந்த உலகத்தில், பணம் செல்வம் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முன்பு எவ்வித மதிப்பும் இல்லை என்று புரிந்து கொள்ளட்டும், என தனது நண்பனிடம் தெரிவித்தமையால் அதை கண்ணீரோடு நிறைவேற்றும் நண்பன், என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

     Fazmin Mohamed  என்ற பேஸ்புக் கணக்கில் ” *அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகவும் பணக்கார மனிதன் ஒருவர் கொரான நோயினால் இறந்து விட்டார். இறப்பதற்கு முன்பு தன் நெருங்கிய நண்பனிடம் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொடுத்து, இந்த பணங்கள் அனைத்தையும் நடு வீதியில் நின்று மேலே வீசி எறி, இதை பார்க்கும் மக்கள் இந்த உலகத்தில், பணம் செல்வம் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முன்பு எவ்வித மதிப்பும் இல்லை என்று புரிந்து கொள்ளட்டும். என்று கூறிவிட்டு மரணம் அடைந்தார் அந்த நண்பரின் கடைசி ஆசையை கண்ணீரோடு நிறைவேற்றினார் அவரது நண்பர்*🙏🙏”  என இம் மாதம் 23 ஆம் திகதி  (23.04.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    இது டுவிட்டர் தளத்திலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பதியப்பட்டிருந்த குறித்த வீடியோவை நாம் யூடியுப் தளத்தில் தேடுதல் மேற்கொண்ட போது, குறித்த வீடியோவை பதிவிட்டிருந்த யூடியுப் அலைவரிசை மற்றும் வீடியோ எமக்கு கிடைத்தது.

    குறித்த வீடியோவில் கீழ் தரப்பட்டுள்ள விளக்கத்தில் தனது நண்பன் மற்றும் சிறந்த வாடிக்கையாளரான Joe KUSH ஒரு வருடங்களுக்கு முன்பு இறந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

    எமது தேடலுக்கு அமைய, கொரோனால் மரணித்த நண்பன் தெரிவித்தமையால் பணத்தை வீதியில் வீசும் நண்பன் என்று பகிரப்படும் வீடியோ போலியான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கொரோனாவில் மரணித்த நண்பன் தெரிவித்தமையால் பணத்தை வீதியில் வீசிய நபர்?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-04-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.