Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    தீப்பெட்டியின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-04-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :தீப்பெட்டியின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் க

    INTRO :
    தீப்பெட்டியின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” தீப்பெட்டியின் புதிய விலை 40\=இடி விழுந்து போவீங்களா ராஜபக்‌ஷாக்களே.நீங்கள் வச்சு செஞ்சது போதுமடா “ என இம் மாதம் 26 ஆம் திகதி 26 .04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Facebook Link | Archived Link

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    தீப்பெட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பகிரப்பட்ட தகவல் குறித்து உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    நமது குழுவினர் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, இலங்கையில் தீப்பெட்டி ஒன்றின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதான செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை முதலில் ஆராய்ந்தோம். ஆனால் அத்தகைய குறிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    அதன்படி, எமது குழுவினர் பல தீப்பெட்டி நிறுவனங்களிடம் விசாரணைகளை ஆரம்பித்தோம்.

    சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சூர்யா தீப்பெட்டியின் புதிய விலை குறித்து சன்மேட் நிறுவனத்திடம் வினவிய போது, அந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும், சந்தையில் இதுவரை ஒரு தீப்பெட்டியின் விற்பனை விலை ரூபாய் 09 ஆகவும், மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக புதிய விலை ரூபாய் 12 ஆகவும் விற்கப்படுவதாகவும். ஒருபோதும் ரூபாய் 40 ஆக அது அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    தீப்பெட்டியின் பின்புறத்தில் அதன் விலை குறிப்பு இடம்பெற்றுள்ளதாக  மேலும் தெரிவித்தனர். ஏனெனில் எந்தச் சூழ்நிலையிலும் அந்த விலையைத் தவிர வேறு எந்த விலையிலும் தீப்பெட்டியை விற்க முடியாது. சிலர் தீப்பெட்டியை 40 ரூபாய்க்கு வாங்கியதாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்றனர்.

    டெல்மா, ஸ்டார், சிங்க தீப்பெட்டிகள்

    டெல்மா, ஸ்டார் மற்றும் லயன் தீப்பெட்டிகள் குறித்த தீப்பெட்டிகளின் புதிய விலை குறித்தும் கேட்டறிந்தோம்.

    ஒரு தீப்பெட்டியின் சந்தை விலை ரூபாய் 10 ஆக ஏற்கனவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். விலை அதிகரிப்பு குறித்து பேசி வருவதாகவும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் இது எந்த வகையிலும் இதன் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், தீப்பெட்டி ஒன்றின் விலையை 15 ரூபாயாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    DIAMOND தீப்பெட்டிகள்

    Diamond Match Company Pvt Ltd உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தீப்பெட்டியின் புதிய விலையை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

    Facebook | Archived Link

    தீப்பெட்டியின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாக தவறான கருத்தினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில், தீப்பெட்டியின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது என பரவும் செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    தீப்பெட்டியின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது என பரவும் செய்தி போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:தீப்பெட்டியின் விலை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-04-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.