Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    கல்கிசை புகையிரத நிலையத்தில் தமிழ்,சிங்கள மொழிகள் மாயமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-12-18
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கையில் கொழும்பை ஆக்கிரமித்துள்ள சீன மொழி என்றும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் மாயமாகியுள்ளதாக கல்சிசை புகையிரத நிலையத்தில் அமையப்பட்டுள்ள கால அட்டவணையினை மையப்படுத்திய ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்

    INTRO :
    இலங்கையில் கொழும்பை ஆக்கிரமித்துள்ள சீன மொழி என்றும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் மாயமாகியுள்ளதாக கல்சிசை புகையிரத நிலையத்தில் அமையப்பட்டுள்ள கால அட்டவணையினை மையப்படுத்திய ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Lankasri  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொழும்பை ஆக்கிரமித்த சீனமொழி; தமிழ் – சிங்கள மொழிகள் மாயம்

    Link >> https://www.jvpnews.com/community/04/294980

    #Colombo #SriLanka ”  என இம் மாதம் 07 ஆம் திகதி  (07.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்ய கூகுள் மேப்பில் நாம் கல்கிசை புகையிரத நிலையத்தினை நாம் தேடிய போது அதில் பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படத்தினை ஒத்த புகைப்படம் ஒன்று 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காணப்படுகின்றது.

    Google Maps | Archived

    இது குறித்து மேலதிக தகவல்களை பெற நாம் கல்சிசை புகையிரத நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புக்கொண்டு வினவிய போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றூலா பயணிகள் குறித்த புகையிரத நிலையத்தில் தூர இடங்களுக்கு பயணிக்கும் புகையிரதங்கள் தொடர்பாக விசாரணைகள் செய்வதாகவும், இதற்காக 2015 ஆம் ஆண்டு முன்னணி சுற்றுலா ஹோட்டலான கல்சிசை ஹோட்டலால் குறித்த காட்சி பலகை பொருத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    மேலும் அங்கு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் நேர அட்டவணை உள்ளதாகவும் தெரிவித்த அவர் குறித்த புகைப்படத்தினையும் எமக்கு அனுப்பி வைத்தார்.

    எனினும் குறித்த நேர அட்டவணையில் தமிழ் மொழி இடம்பெற்றிருக்கவில்லை என்பது எமது அறிய கிடைத்தது.

    TripAdvisor என்ற இணையதளத்திலும் குறித்த நேர அட்டவணை கல்கிசை புகையிரத நிலையத்தின் புகைப்படத் தொகுப்பில் காணக்கிடைத்தது.

    TripAdvisor | Archived

    அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளால் மட்டுமே பெயர் பலகைகளைக் காண்பிக்க நாட்டில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு என புதிய சட்டங்களை முன்மொழிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நாம் ஆய்வினை நடத்தும் போது இலங்கை புகையிரத திணைக்களத்தினால் சீன மொழியில் இருந்த நேர அட்டவணையினை உடனடியாக நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Colombo Gazette | Archived link

    Ceylontoday.lk | Archived link

    நாம் மேற்கொண்ட தேடலில் கல்கிசை புகையிரத நிலையத்தில் தமிழ், சிங்கள மொழிகள் மாயம் என தெரிவிக்கப்பட்டு வந்த புகைப்படம் வெளிநாட்டு பயனாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கல்கிசை புகையிரத நிலையத்தில் தமிழ்,சிங்கள மொழிகள் மாயமா?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-12-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.