
INTRO :
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி அநுராதபுர நகர சபை மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் பேரணியில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கலந்துகொண்டது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகளும் சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim 01

சமூகவலைத்தளங்களில் ““இன்று நமது தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் என்னைப் போலவே அவரும் இந்த மேடைக்கு ஏறுவார், இந்த யுத்தத்தை முடிக்க மிகப்பெரிய தேவை அநுர குமாரவின் JVP க்குக் இருந்தது, அதனால்தான் நாம் இன்று மாலிமாவிற்கு எதிராக பொஹொட்டுவ மேடைக்கு ஏறினோம். நான் ஒரு புலி… புலி என்றாலும் ஏறக்கூடிய மேடை இதுதான்”” என இம் மாதம் 13 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (13.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 02
சமூகவலைத்தளங்களில் “பொதுஜன பெரமுன பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மக்களை உரையாற்றும் காட்சியினை பயன்படுத்தி, “நாமலுக்காக மிலிந்த ஜெனீவா சென்று பேச தமிழ் டயஸ்போராவின் UN பதிவு செய்யப்பட்ட NGO வை கொடுத்தது நான்” என குறிப்பிட்டு சமூக வலைத்தலங்களில் பதிவு பகிரப்பட்டுள்ளது.” என இம் மாதம் 15 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (15.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
Claim 01
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சமீபத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் பிரதான ஊடகங்களால் வெளியிடப்பட்டிருந்தன. எனினும், மேற்கண்ட சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற முழுமையான கூற்றை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாக எந்தவொரு பிரதான ஊடகமும் வெளியிட்டிருக்கவில்லை.
இணையத்தில் பகிரும் கருத்தில், பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஒரு ‘புலி’ என அடையாளப்படுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார், மேலும் அந்த அறிக்கை பிரதான ஊடகங்களாலும் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா ஆற்றிய உரை:
எனக்கு சில காரணங்கள் தெரிவிக்கவே இந்த மேடையில் நான் ஏறினேன். நாம் வடக்கில் பிறந்தவன் 40 வருடங்களாக வடக்கில் இந்த நாட்டில் தான் நான் வாழ்கின்றேன். பிற நாட்டில் இருந்து இந்த நாட்டிற்கு நான் வரவில்லை.
என் மக்கள் இந்த கூட்டத்தில் சிங்கள மக்கள் என்று சொல்லும்போது எனக்கு மகிந்த ராஜபக்ச அவர்களை மட்டும் தான் ஞாபகம் வருகிறது, வேறு யாரும் இல்லை. காட்டின் உள்ளே சிங்கம் இருக்க முடியும், புலி இருக்க முடியும், ஆனால் நரியைத்தான் நியமித்துள்ளீர்கள். நீங்கள் நரியைத்தான் நியமித்துள்ளீர்கள்.
இந்த 71 வருடத்தில் இப்படி நடைப்பெற்றது இல்லை.நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு நான் இந்தப் புலியாக இருந்தும் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் நரியைத்தான் நியமித்துள்ளீர்கள். அதனால் தான் சிங்கத்தின் முன்பு வந்து பேசுகிறேன்.
நீங்கள் பாருங்கள் பாராளுமன்ற உறுப்பினரான பின்னும் நான் செல்வது தனியாகவே.ஆயினும் இவரின் ஆட்சியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட பாதுகாப்பின்றி சென்றதில்லை.
டயஸ்போராவில் இருந்து நாங்கள் நிறைய பணம் கொடுத்தோம். நாங்கள் இந்தத் தேர்தலுக்காக நிறைய பணம் கொடுத்தோம், உங்களில் யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த டயஸ்போராதான் என்னிடம் போய் சிங்கள மக்கள் முன்பு இதை சொல் என்றனர்.
நான் சொல்கிறேன் வடக்கிற்கும் தெற்கிற்கும் மட்டும் தான் பேச முடியும், நரியால் பேச முடியாது.
இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் எனக்குத் தமிழ் ஈழம் வேண்டும் என்று நான் எப்போதும் கேட்பதில்லை. எனக்கு இந்தச் சிங்கள மக்கள் வேண்டும். நீங்கள் எப்போதாவது தமிழன் ஒருவனை ஏசும் போது என் முகத்தை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு தமிழ் ஒருவரை கொல்ல வேண்டுமா என்னை கொல்லுங்கள். ஆயினும் எனது மக்களை உங்களுடன் சேர்த்து விட்டு தான் நான் செல்வேன்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமலிடம் சொன்னேன், நீங்கள் 2029 இல் ஜனாதிபதி ஆகுவீர்கள். என்ன நடந்தாலும் 2029 இல் சிங்கள-தமிழ் என்ற பிரச்சினை இருக்காது என நான் சொல்கிறேன், உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சிறையில் அடைத்தாலும் என்ன செய்தாலும் நாமல் ராஜபக்ச நிச்சயமாக ஜனாதிபதியாவார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சனாவின் முழுமையான உரையை பகுப்பாய்வு செய்யும் போது, அவர் தற்போதைய ஆட்சியாளர்களை நரியுடன் ஒப்பிட்டுள்ளதும், தன்னை ஒரு புலியாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சிங்கமாக குறிப்பிட்டுள்ளதும் தெளிவாகிறது.
எனினும், சமூக வலைத்தளப் பதிவில் உள்ளவாறு “இன்று நமது தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் என்னைப் போலவே அவரும் இந்த மேடைக்கு ஏறுவார்” என்றோ அல்லது LTTE பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து எந்தவொரு கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும், “யுத்தத்தை முடிக்க அனுர குமாரவின் JVP க்குத்தான் மிகப்பெரிய தேவை இருந்தது” என்றோ அல்லது அது குறித்தும் அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அநுராதபுரம் பேரணியில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா “நான் ஒரு புலி” என்று கூறியமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய எதிர்க்கட்சியால் இந்த முறையீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா LTTE பயங்கரவாத அமைப்பை ஊக்குவிப்பதாகக் கூறி இது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி டயஸ்போராவிலிருந்து நிதி கிடைத்தது என்ற கூற்றை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதித்த மறுத்துள்ளார்.
Claim 02
மேற்கண்ட சமூக வலைத்தலளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சனா தெரிவித்திருந்தால் அது பிரதான ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்க வேண்டும், நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அவ்வாறு செய்திகள் எதுவும் காணப்படவில்லை.
பொதுஜன பெரமுன பேரணியில் அர்ச்சுனா இவ்வாறானதொரு கருத்தைக் கூறினாரா என அவரது முழுமையான உரையை பரிசீலித்ததில், அவர் அவ்வாறு எதையும் தெரிவிக்கவில்லை என்பது உறுதியானது.
ஜெனீவாவில் நடைபெற்ற 63 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை
மனித உரிமைகள் அமர்வின் போது மிலிந்த ராஜபக்ச தனது உரையின் தொடக்கத்தில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு சாரா அமைப்பு எது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுவதை அடையாளம் காண முடியும்.
அதற்கமைய, மிலிந்த ராஜபக்ச அவர்கள் Global Sri Lanka Forum United Kingdom அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகிறார் என்பது தெளிவாகிறது. மிலிந்த ராஜபக்ச அவர்களின் முழுமையான அறிக்கை கீழே உள்ளது.
மிலிந்த ராஜபக்ஷ
மிலிந்த ராஜபக்ஷ செப்டம்பர் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 63 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொண்டார்.
அவர் “Global Sri Lanka Forum United Kingdom” அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியே மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியுள்ளார்.

மிலிந்த ராஜபக்சவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் தகவல்களை அவர் முழுமையாக மறுத்தார். அத்துடன் அவரது அதிகாரப்பூர்வ HRC63 அனுமதிப்பத்திரத்தையும் (Badge) எமக்கு சமர்ப்பித்துள்ளார்.
Global Sri Lanka Forum United Kingdom
Global Sri Lankan Forum என்பது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு சர்வதேச அமைப்பு வலையமைப்பாகும்.
ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை வெளிநாட்டுத் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காகக் குரல்கொடுப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், LTTE ஆதரவான புலம்பெயர் குழுக்களால் சர்வதேச அளவில் பரப்பப்படும் சித்தாந்தங்களுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற நிறுவனங்கள் மூலம் இலங்கை ஆயுதப்படை மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் சர்வதேச தளத்தில் வாதங்களை முன்வைக்கும் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா
இதுகுறித்து நாம் பாராளுமன்ற உறுப்பினரான ராமநாதன் அர்ச்சுனாவை தொடர்புக்கொள்ள முயற்சித்து அது பயனளிக்கவில்லை. விரைவில் அவரை தொடர்புக்கொண்டு இந்த ஆய்வறிக்கையை புதுப்பிக்கின்றோம்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பொதுஜன பெரமுன பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தெரிவித்ததாக பகிரப்படும் கருத்துக்கள் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



