INTRO :
கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த Saudia Airliner விமானம் மீது தாக்குதல் என சமூகவலைத்தளங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “”அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல்?
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் தருணங்களைக் காட்டும் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ” என இம் மாதம் 09ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (09.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் கடந்த 11 ஆம் திகதி (11.10.2026) தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் அனைத்து செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. CNN | BBC
குறித்த செய்திகள் அடிப்படையில், பயணிகள் அமரும் முனையப் பகுதி அருகாமையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதில் இதுவரையில் 12 பேர் (12.10.2026) உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ariananews
ஆயினும் கடந்த வியாழக்கிழமை (08.10.2026) அன்று இடம்பெற்ற தாக்குதலின் போது, Saudia Airlines விமான நிறுவனத்திற்கு சொந்தமான Airbus A310-200 முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட புகைப்படங்கள் உடன் செய்திகள் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.
தற்போது இணையத்தில் வைரலாகின்ற குறித்த காணொளியினை ஒத்த எந்தவொரு காணொளியும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
ஆகவே நாம் குறித்த காணொளியை நன்கு அவதானித்தபோது, அதில் விமானத்தின் மீது தாக்குதல் இடம்பெற்று விமான வெடிக்கும் போது அதில் அருகில் இருந்த வாகனங்கள் வெடிக்கும் காட்சி இயற்கைக்கு மாறாக காணப்பட்டது.

விமானத்திற்கு அருகில் இருந்து தூக்கி வீசப்படும் குறித்த வாகனங்கள் ஒரு காகித அட்டைபோல் மடியும் காட்சி எமக்கு காணக்கிடைத்தது.

நாம் இதில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி Google Lens உதவியுடன் ஆய்வினை மேற்கொண்டபோது, குறித்த காணொளியுடன் பொருந்தமான ஒரு புகைப்படம் எமக்கு காணக்கிடைத்து. Link
வைரலாகின்ற காணொளியில் முதல் காட்சியையும், அக்காணொளியுடன் பொருந்தும் புகைப்படத்தினை நாம் ஒப்பிட்ட போது, அதில் இருந்த வாகன தரித்து வைக்கப்பட்டிருந்த விதம், விமானத்தின் கதவுகள் மூன்றும் திறந்திருந்தமை மற்றும் விமானத்திற்கு கீழ் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் என பொருந்தும் வகையில் இருந்தமை கண்டறியப்பட்டது.


செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் ஆய்வு செய்த போது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த Saudia Airliner விமானம் மீது தாக்குதல் என பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



