Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    புர்ஜ் கலிபாவில் ஒளிர விடப்பட்ட முஷ்கானின் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-02-25
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :புர்ஜ் கலிபாவில் ஒளிரவிடப்பட்ட முஷ்கானின் புகைப்படம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலிய

    INTRO :
    புர்ஜ் கலிபாவில் ஒளிரவிடப்பட்ட முஷ்கானின் புகைப்படம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” உலகின் உயரத்தில் நம் சிங்கப்பெண்ணுக்கு மரியாதை.

    #Burj_Khalifa_Dubai

    #Allahuakbar “ என இம் மாதம் 11 ஆம் திகதி (11.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் முதலில் புர்ஜ் கலிபாவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆய்வினை மேற்கொண்ட போது, அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் பதிவிட்டிருந்த வீடியோக்களில் எதிலும் முஷ்கானின் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்தமைக்கான ஆதாரங்கள் எதிவும் எமக்கு தென்படவில்லை. 

    லேசர் கதிர் மற்றும் வெளிச்சத்தினை பயன்படுத்தி புர்ஜ் கலிபா கட்டிடத்தில் காட்சிகள் வருகின்ற மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் காணக்கிடைத்தது.

    gulfnews.com | Archived Link

    புர்ஜ் கலிபாவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு காணொளியானது இணையத்தில் முஷ்கானின் பெயர் மற்றும் புகைப்படம் ஒளிர்ந்ததாக வெளியாகி பரவி வருகின்ற காணொளியினை ஒத்ததாக அமைந்திருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்ற குறித்த வீடியோவில் 1 நிமிடமும் 48  செக்கனுக்கு பின்னர் Muskahan என்ற எழுத்து மட்டும் தனியாக உள்ளது. அதற்கமைய குறித்த வீடியோவில் Muskahan என்ற எழுத்து சேர்த்து எடிட் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    தொடர்ந்து குறித்த வீடியோவினை ஆய்வு செய்த போது முஷ்கானின் புகைப்படம் புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கும் நீர்தாரகை செய்யும் போது அதன் மேல் இருப்பதாக அமைந்துள்ளமை காணக்கிடைக்கின்றது. அதற்கமைய குறித்த புகைப்படத்தினை ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோவின் மீது வைத்து எடிட் செய்துள்ளமை நன்கு விளங்குகின்றது.

    Dr.Asma Zehra Tayeba உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறித்த வீடியோ பகிரப்பட்டதை தொடர்ந்து பலர் பயனாளிகள் குறித்த வீடியோ போலியானது என அந்த டுவிட்டின் கீழ் பதிவிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், புர்ஜ் கலிபாவில் முஷ்கானின் புகைப்படம் ஒளிரவிடப்பட்டுள்ளதாக பகிரப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:புர்ஜ் கலிபாவில் ஒளிர விடப்பட்ட முஷ்கானின் புகைப்படம் உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: Altered

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-02-25

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.