Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-07-02
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ஜுன் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Abdu

    ஜுன் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

    தகவலின் விவரம்:

    Facebook Link | Archived Link

    Abdul Latheef என்ற பேஸ்புக் கணக்கில்  ” முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!🤔

    நேற்று மஹரகம பகுதியில் நடைபெற்ற

    சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது சம்பிக ரணவக இதனை தெரிவித்தார்!😠

    எங்கட காகாமார் ராதாமார் இதையெல்லாம் நம்பமாட்டாங்க காரனம் எல்லோருக்கும் சஜித் பைத்தியம் முத்திப்போச்சுது!😠

    ” என்று ஜுன் மாதம் 28 ஆம் திகதி (28.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தில் ” முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தையை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க 

    நேற்று மஹரகம பகுதியில் நடைபெற்ற ஸஜித் ப்ரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது இதனை தெரிவித்தார்.” என்று பதியப்பட்டுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் குறித்த தகவலை கண்டறியவதற்கு சம்பிக்க ரணவக்கவின் ஊடக செயலாளரை தொடர்பு கொண்டோம்.

    குறித்த சந்தர்ப்பத்தில் அவரின் ஊடக செயலாளர் இது முற்றிலும் தவறான தகவல் என்று தெரிவித்தார்.

    மேலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் சம்பிக்க ரணவக்கவிற்கு இருக்கும் நல்லெண்ணத்தினை கெடுக்கும் நோக்கத்தில் விஷமிகளால் பரப்பப்படும் தகவல் என தெரிவித்தார்.

    கடந்த மாதம் 27 ஆம் திகதி மஹரகம பகுதியில் பிரச்சார கூட்டம் நடைப்பெற்றுள்ளது.

    குறித்த கூட்டத்தில் தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்படும்  முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற செய்தினை நாம்  Google இணையத்தளத்தினை பயன்படுத்தி தேடுதல் செய்தவேளையில், அவ்விதமான எவ்வித செய்தியும் பகிரப்படவில்லை என கண்டறியப்பட்டது.

    இதற்கமைய முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தாக பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Conclusion: முடிவு

    மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தாக பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Avatar

    Title:முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-07-02

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.